ரஜினிகாந்த் பிறந்த நாள்.. பஹ்ரைனில் ரத்ததானம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்
மனாமா: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நேற்று, புதன்கிழமை ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரஜினிகாந்த்தின் 69வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் விதம் விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரஜினிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், நலம் விரும்பிகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

பஹ்ரைனில் கொண்டாட்டம்
இந்த நிலையில் பஹ்ரைனிலும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். பனாமா, செகாயா பகுதியில் அமைந்துள்ள மிடில் ஈஸ்ட் மருத்துவமனையில் ரத்த தான முகாம் ஒன்று பஹ்ரைன் ரசிகர் மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்றது.

69 பேர் தானம்
ரஜினிகாந்த்தின் 69வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 69 மன்ற உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர் மேலும் பெரிய கேக் வெட்டியும் ரசிகர் மன்றத்தினர் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

பாராட்டும், நன்றியும்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் வர்கீஸ் குரியன் மற்றும் பொது மேலாளர் மருத்துவர் கலீல் அப்துல்வா ஹித் ஓமர் ஆகியோர் கலந்துகொண்டு மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள்
பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சுரேஷ் காலாடி மற்றும் ரமேஷ் முத்தன், சுதீர், ராஜேந்திரன், ரமேஷ் நாராயணன், வேம்பூர் செந்தில்குமார், சதீஸ் உள்ளிட்ட செயற்குழு உறுபினர்கள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தைகளுக்கான கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல், படங்கள்:
முனைவர். பெ. கார்த்திகேயன்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications