பாகுபலிக்கு 'ஸ்டேன்டிங் ஓவேஷன்'.. அமெரிக்காவில் முதல் நாளே $1 மில்லியன் குவித்து சாதனை!
Subscribe to Oneindia Tamil
அமெரிக்காவில் இன்று முதல் நாளே 1 மில்லியன் டாலர் குவித்து சாதனைப் படைத்துள்ளது எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி.
அமெரிக்காவில் பாகுபலியின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள் கிட்டத்தட்ட 300 அரங்குகளில் வெளியாகின. இந்த இரு பதிப்புகளுமே பிரிமியர் காட்சிகளில் அதிக வசூலைக் குவித்து சாதனைப் படைத்தன.

இன்றைய ப்ரிமியர் காட்சிகளில் வசூலாக 1 லட்சம் டாலரைக் குவித்துள்ளது பாகுபலி. 118 அரங்குகளில் 1,010,550 டாலர்கள் வசூலாகியிருப்பது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
#Bahubali USA M official at 5pm EST - ,010,550 from 118 screens on Rentrak.
— ATMUS Entertainment (@ATMUSent) July 9, 2015 சியாட்டல் நகரில் இந்தப் படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து படக் குழுவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆகியுள்ள வசூல் நிலவரம் நாளை தெரியவரும்.












Click it and Unblock the Notifications