பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. வெளியான ஷாக் வீடியோ!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்தியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றிய வீடியோவை தீவிரவாத குழுக்கள் வெளியிட்டிருக்கின்றன.
இந்த கடத்தல் சம்பவத்தில் 182 பயணிகள் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பலூச் விடுதலை படை (Baloch Liberation Army - BLA) எனும் தீவிரவாதிகள்தான் செய்திருக்கிறார்கள்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 500க்கும் அதிகமான பயணிகளுடன் 9 பெட்டிகளை கொண்ட ஜாஃபர் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை புறப்பட்டது. இது பெரோ குன்ரி-கடாலார் பகுதிகளுக்கு இடையே வந்தபோது அதிரடியாக கடத்தப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் ரயில் இயக்கப்படுவது கொஞ்சம் சவாலான விஷயம்.
எனவே ரயில் மெதுவாக சென்றிருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட தீவிரவாதிகள் ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்த்தி கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது சுமார் 20 ராணுவ வீரர்களை சுட்டுக்கொண்றதாகவும், மீதம் இருந்தவர்களில் பலூசிஸ்தானை சேர்ந்தவர்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவம் மீதமிருக்கும் 182 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
தங்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், பணய கைதிகளை கொல்லவும் தயங்க மாட்டோம் என்று தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ரயிலை எப்படி கைப்பற்றினோம் என்பது குறித்த வீடியோவை அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். வீடியோவில் ஒரு சுரங்கத்திற்கு முன்பாக ரயில் வந்துக்கொண்டிருக்கிறது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக வெடி குண்டு வெடிக்கிறது. இதனால் ரயில் நிறுத்தப்படுகிறது. உடனடியாக ரயிலுக்குள் ஏறும் தீவிரவாதிகள் அதனை கைப்பற்றுகின்றனர்.
Asim Munir is responsible for all Terrorism in Pakistan
— 𝗦𝗜𝗟𝗘𝗡𝗧 𝗚𝗨𝗔𝗥𝗗𝗜𝗔𝗡 (@Censored_Locks) March 12, 2025
Asim Malik is responsible for all Terrorism in Pakistan
ISI/Pakistan Army is responsible for all Terrorism in Pakistan #Terrorism#TrainHijack#Balochistan#JaffarExpress#BalochLiberationArmy pic.twitter.com/tqSHaSSB2c
ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி தீவிரவாதிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மலைக்கு மேலேயும் தீவிரவாதிகள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியிருக்கிறது. இந்த கடத்தல் சம்பவத்திற்கு அந்நாட்டு அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பலூசிஸ்தான் பகுதி எல்லா வளங்களையும் கொண்டு பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக இருப்பதாகவும், ஆனால், இதுவரை எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை என்றும் எனவே தனிநாடு கோரிக்கையை தாங்கள் முன்வைத்திருப்பதாக பலூச் விடுதலை படை (Baloch Liberation Army - BLA) எனும் தீவிரவாதிகள்தான் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications