நீச்சல் குளம், சோஃபா எதையும் விடல! ஷேக் ஹசீனா அரண்மனையில் பொருட்களை அள்ளிய போராட்டக்காரர்கள்
டாக்கா: வங்க தேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. அங்கு இதுவரை ஏற்பட்ட வன்முறையில் சுமார் 200 பேர் கொல்லப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து ஷேக் ஹசீனா தனது பொறுப்பில் இருந்து விலகினார்.

ஹேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் உரையாற்றினார். இந்த உரையில், "இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார். இதைத் தொடர்ந்து, வங்கதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவ தளபதி ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் உடனடியாக தனது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் வங்கதேசத்தின் கனபாபன் என்ற இடத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா புறப்பட்டுச் சென்றார். இந்தியாவின் திரிபுராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிருந்து டெல்லி புறப்பட்டுள்ளதாகவும் லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்ரன.

ஆனால் ஷேக் ஹசீனா, எங்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. வன்முறை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, நாட்டை விட்டு அவசர அவசரமாக ஷேக் ஹசீனா தப்பி ஓடினார். ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த

போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர்.
தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர். போராட்டக்கார்கள் கையில் கிடைத்த பொருட்களை ஒன்று விடாமல் அள்ளி செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications