வங்கதேசத்தில் விடிய விடிய துப்பாக்கிச்சூடு: 9 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற போலீஸ்
டாக்கா: வங்கதேசத்தில் குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்த 9 இஸ்லாமிய பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்யாண்பூர் பகுதியில் இருக்கும் குடியிருப்பு ஒன்றுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நேற்று இரவு புகுந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சிறிய கையெறி குண்டை வீசினர். மேலும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் போலீசாரை நோக்கி சுடும்போது அல்லாஹு அக்பர் என்று மீண்டும் மீண்டும் கூறினர்.
பதிலுக்கு போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டனர். அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 2 மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இறுதியில் போலீசார் 9 பயங்கரவாதிகளை இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
அந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்த 5 பேர் 20 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications