உச்சிக்கேறிய கோபம்.. ரசிகர்னு கூட பார்க்கலையே. கூட்டத்திலேயே தாக்கிய ஷாகீப் அல் ஹாசன்! ஷாக் வீடியோ
வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ஷாகீப் அல் ஹாசன் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனான ஷாகீப் அல் ஹாசன் திடீரென டென்ஷனாகி ரசிகரை கூட்டத்துக்கு நடுவே வைத்து வெளுத்து வாங்கினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஷாகீப் அல் ஹசன். இவர் வங்கதேச அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக தற்போது ஷாகீப் அல்ஹாசன் உள்ளார்.
இவர் தனது பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சால் சிறந்த ஆட்டராக ஜொலித்து வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான ஆல்ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலில் ஷாகீப் அல் ஹசன் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

சர்ச்சைக்கு பெயர் பெற்றவர்
ஷாகீப் அல் ஹாசன் சிறந்த பிளேயராக இருந்தாலும் கூட அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் ஓடிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவரது கோபம் தான். களத்திலும், களத்துக்கு வெளியேயும் சட்டென கோபத்தை வெளிப்படுத்தும் நபராக ஷாகீப் அல்ஹாசன் உள்ளது அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக களத்தில் அவர் அடிக்கடி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நாம் பார்த்திருக்கலாம்.

புதிய சர்ச்சையில் அல்ஹாசன்
மேலும் தற்போது வங்கதேச அணியிலும் ஷாகீப் அல் ஹாசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் இடையே நல்லப்படியான உறவு இல்லை என கடந்த மாதம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் தெரிவித்து இருந்தார். இது கிரிக்கெட் அரங்கில் பேசுபொருளானது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஷாகீப் அல் ஹாசன் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குவிந்த ரசிகர்கள்
அதாவது வங்கதேசத்தில் ப்ரோமோஷன் தொடர்பான நிகழ்ச்சியில் ஷாகீப் அல் ஹாசன் பங்கேற்றார். சட்டோகிராம் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஷாகீப் அல் ஹாசனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷாகீப் அல் ஹாசனால் சதாரணமாக நடந்து கூட செல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் செல்லும் பாதை முழுவதும் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

ரசிகரை தாக்கில் ஷாகீப்
இந்த வேளையில் சிலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார். மேலும் திடீரென்று ரசிகர் ஒருவர் ஷாகீப் அல் ஹாசன் அணிந்திருந்த தொப்பியை எடுத்தார். அப்போது சட்டென கோபமடைந்த ஷாகீப் அல் ஹாசன் வசைபாடினார். மேலும் அந்த ரசிகரின் கையில் இருந்த தொப்பியை பறித்து கொண்ட ஷாகீப் அல் ஹாசன் அதை வைத்தே ரசிகரை ஆக்ரோஷமாக தொடர்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.

வெளியான வீடியோ
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் செல்போன் கேமராக்களில் வீடியோவாக பதிவானது. இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஷாகீப் அல் ஹாசனின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். தொப்பியை ரசிகர் எடுத்தது தவறு என ஒரு தரப்பினரும், ரசிகர் தொப்பியை எடுத்தாலும் கூட ஷாகீப் அல் ஹாசன் கோபத்தை கண்ட்ரோல் செய்து நடந்திருக்கலாம் என இன்னொரு தரப்பினரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications