வங்கதேச மாணவர் தலைவரை கொன்ற யூனுஸ் அரசு! சகோதரர் பகீர் குற்றச்சாட்டு! மீண்டும் வெடிக்கும் பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிக பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இடைக்கால அரசின் தலைவராக இருக்கும் யூனுஸ் தான் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலைக்குக் காரணம் என அவரது சகோதரர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த வருடம் வங்கதேசத்தில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்திருந்தது. அதில் தான் ஹசீனா அரசு தூக்கி எறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அங்கு இயல்பு நிலை மெல்லத் திரும்பி வரும் சூழலில், பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

உஸ்மான் ஹாதி படுகொலை
இந்தத் தேர்தலில் ஷெரீப் உஸ்மான் ஹாதி போட்டியிட இருந்தார். கடந்தாண்டு வங்கதேச மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தான் இந்த ஷெரீப் உஸ்மான் ஹாதி. அவர் தேர்தலில் போட்டியிடப் பிரச்சாரத்தை ஆரம்பித்த போது மர்ம நபர் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த டிசம்பர் 12ம் தேதி இந்தச் சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனில்லாமல் கடந்த டிசம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
முகமது யூனுஸ் காரணம்
அவரது மரணத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இப்படிப் பரபரப்பான சூழலே அங்குக் காணப்படுகிறது. இதற்கிடையே வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலைக்குத் தற்போதைய யூனுஸ் அரசு தான் பின்னணியில் இருப்பதாகச் சகோதரர் ஷெரீப் உமர் ஹாதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
முகமது யூனுஸ் இடைக்கால அரசின் ஒரு பிரிவினர், பிப்ரவரி மாத தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த படுகொலையை நடத்தியதாக ஷெரீப் உமர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது சகோதரர் உஸ்மான் ஹாதி கொலையைக் கண்டித்து டாக்காவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட உமர் ஹாதி நேரடியாகவே யூனுஸ் அரசைக் குற்றஞ்சாட்டினார்.
பரபர குற்றச்சாட்டு
அவர் மேலும் கூறுகையில், "உஸ்மானை நீங்கள் தான் கொன்றீர்கள்.. இதை ஒரு பிரச்சினையாக மாற்றி தேர்தலை சீர்குலைக்க முயல்கிறீர்கள். உஸ்மான் ஹாதி பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். எனவே, அவரது மரணத்தைக் காரணமாக வைத்துத் தேர்தலை ரத்து செய்யக்கூடாது. சீக்கிரம் விசாரணையை முடித்து, தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது.
நாட்டை விட்டு விரட்டப்படுவீர்கள்
ஆனால், யூனுஸ் அரசு விசாரணையைத் துரிதப்படுத்துவது போலத் தெரியவில்லை. உஸ்மானுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், நீங்களும் ஒரு நாள் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றார். கடந்தாண்டு நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது வேறு வழியில்லாமல் அப்போதைய பிரதமர் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அதேபோன்ற ஒரு நிலை யூனுஸுக்கும் ஏற்படும் என்றே உமர் ஹாதி எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "எனது சகோதரர் எந்தவொரு ஏஜென்சிக்கும் அல்லது வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அடிபணியவில்லை. அதுவும் கூட அவரது கொலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது" என்றார். மேலும், இந்தப் படுகொலையில் ஆழமான சதியும் பாசிச சக்திகளின் தலையீடும் இருப்பதாகவும் உஸ்மான் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications