Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசத்தில் வெற்றி யாருக்கு? இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா! அரசியல் சூழல் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இளைஞர்கள் முன்னெடுத்த புரட்சி காரணமாக, அந்நாட்டில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்டது. கடந்த 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள்? இந்தியாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.

299 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் பங்கேற்பார்கள். இத் தேர்தல் தெற்காசியாவில் மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Bangladesh Election 2026 Bangladesh

கள நிலவரம் என்ன?

சமீபத்திய கருத்துக் கணிப்புகள், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணியும், ஷஃபிகுர் ரஹ்மான் தலைமையிலான ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணியும் கடும் போட்டியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. கணக்கெடுப்பின்படி, BNP கூட்டணி 44.1 சதவீத வாக்குகளையும், ஜமாத் கூட்டணி 43.9 சதவீத வாக்குகளையும் பெறக்கூடும். இது தேசிய அளவில் நெருக்கமான போட்டியைக் காட்டுகிறது. எனினும், தேர்தல் முடிவுகள் தொகுதி அளவிலான போட்டிகளைப் பொறுத்தே அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துக் கணிப்புகள்

ஆனால், கருத்துக் கணிப்புகள் மாறுபட்ட கணிப்புகளை முன்வைக்கின்றன. இஸ்லாமியக் கட்சிகள் சுமார் 105 தொகுதிகளிலும், BNP கூட்டணி 101 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. மற்றொரு கருத்துக்கணிப்பு BNP-க்கு சுமார் 208 இடங்களும், ஜமாத் கூட்டணிக்கு 46 இடங்களும் கிடைக்கலாம் எனக் கணிக்கிறது. இந்த மாறுபட்ட கணிப்புகள், பிராந்திய வேறுபாடுகளையும், வாக்காளர் பங்கேற்பில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளையும் பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சுமார் 75 தொகுதிகள் கடும் போட்டி நிறைந்தவை. இங்கு சிறிய மாற்றம்கூட முடிவை வெகுவாக மாற்றும்.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி

வங்கதேசத்தை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் மத்தியில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நல்ல பெயரை பெற்றிருக்கிறது. இது 'நண்பனாக இரு, எஜமானராக அல்ல' என்கிற முழக்கத்தை முன்வைத்துள்ளது. இந்தியா உடனான உறவை அக்கட்சி இப்படித்தான் பிரதிபலிக்கிறது. தாரிக் ரஹ்மானின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, நாடு முழுவதும் வலுவான செல்வாக்குப் பெற்றுள்ளது. பெரும்பாலான வாக்காளர்கள் இக்கட்சியை தங்கள் அரசியல் தேர்வாகக் கருதுகின்றனர். தாராளவாத-மையவாத மாற்றாக தன்னை இக்கட்சி நிலை நிறுத்துகிறது.

வாய்ப்பு யாருக்கு இருக்கிறது?

தேசிய வாக்குப் பங்கில் பின்தங்கியிருந்தாலும், ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி பல பிராந்தியங்களில் வலுவான உள்ளூர் அமைப்பு வலையமைப்பைக் கொண்டுள்ளது. அடிமட்ட அளவிலான அணிதிரட்டல் தீர்க்கமான பங்கு வகிக்கும் தொகுதிகளில் அது சிறப்பாகச் செயல்படக்கூடும். தொகுதி அளவிலான பலம் கணிசமான இடங்களை வெல்ல வழிவகுக்கும்.

இந்தியா உடனான உறவு

மொத்த 12.77 கோடி தகுதியுள்ள வாக்காளர்களில் 6.48 கோடி ஆண், 6.28 கோடி பெண், மற்றும் 1,220 மூன்றாம் பாலின வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அக்கட்சி தலைமையிலான அரசு இந்தியாவுடன் பழைய மாதிரி உறவுகளை வைத்துக்கொள்ளாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இந்திய எதிர்ப்பை முன்வைக்கின்றன. இப்படி இருக்கையில், இந்த தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

வங்கதேசம் அரசியல் களம்

மொத்த தொகுதிகள் - 299
வெற்றி பெற தேவையான இடம் - 150
எந்த கட்சிகள் களத்தில் உள்ளன? - BNP கூட்டணி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி
வாக்குச்சாவடிகள் - 42,766 நிரந்தர மையங்கள்
பார்வையாளர்கள் - 540 வெளிநாட்டு பார்வையாளர்கள் உட்பட 55,000க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள்
சிறுபான்மையினர் (இந்துக்கள்) - 1.3 கோடி

இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, மாலை 4.30 வரை நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+