வங்கதேச தேர்தலில் BJP-க்கு முதல் வெற்றி! யாருமே எதிர்பாராத சம்பவம்.. வென்றது யாரு? பின்னணி
டாக்கா: நம்நாட்டில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. அதோடு 25க்கும் அதிகமான மாநிலங்களில் தனித்தும், கூட்டணி ஆட்சியிலும் பாஜக உள்ளது. இந்நிலையில் தான் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் BJP தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுதான் தற்போது இணையதளங்களில் பேசும் பொருளாகி உள்ள நிலையில் இந்த வேட்பாளர் - கட்சியின் பின்னணி உள்பட முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024ல் மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இடைக்கால அரசு நடந்து வந்தது. இந்த வேளையில் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது தான் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உயிருடன் எரித்து கொல்லப்பட்டதோடு, அடித்தும் கொலை செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வங்கதேசத்திடம் கேட்டு கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து வந்தது. இதற்கிடையே தான் வங்கதேசத்தில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
பிஎன்பி அமோக வெற்றி
இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சியும், ஷபிஹூர் ரஹ்மானின் ஜேஇஐ எனும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகள் இடையே தான் போட்டி நிலவியது. இதில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தார். இதனால் 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பிஎன்பி கட்சி மொத்தம் 209 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்க 151 இடங்கள் தேவை என்ற நிலையில் தனி மெஜாரிட்டியுடன் பிஎன்பி கட்சியை ஆட்சியை பிடித்துள்ளது.
BJP முதல் வெற்றி
விரைவில் தாரிக் ரஹ்மான் அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் பிஎன்பி கட்சியின் கூட்டணிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் கணசம்கதி அந்தோலன், வங்கதேச ஜாதியா கட்சி, மற்றும் கோனோ ஒடிகார் பரிஷத் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.
இதில் வங்கதேச ஜாதியா காட்சி (Bangladesh Jathiya Party) சுருக்கமாக BJP என்று அழைக்கப்படுகிறது. இதனால் தான் வங்கதேசத்தில் பிஜேபி முதல் வெற்றியை பதிவு செய்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் உண்மையில் அது நம் நாட்டை சேர்ந்த பாஜக கட்சி இல்லை. அது வேறு கட்சி.
எவ்வளவு வாக்கு?
வங்கதேசத்தில், BJP (Bangladesh Jathiya Party) இதுவரை தேர்தலில் வெல்லாத நிலையில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி சார்பில் போலோ -1 தொகுதியில் போட்டியிட்ட அந்தலீவ் ரஹ்மான் வெற்றி வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 1,05,543 ஓட்டுகள் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜமாத் இ இஸ்லாமி வேட்பாளர் எம்டி நஸ்ருல் இஸ்லாம் 75,337 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications