என்ன நடக்கிறது வங்கதேசத்தில்.. திடீரென முடங்கிய தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்! ரிசல்டில் குழப்பம்?
டாக்கா: வங்கதேசத்தில் நேற்று பிரதமருக்கான தேர்தல் நடந்து முடிந்திருந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வந்த நிலையில், திடீரென தேர்தல் ஆணையத்தின் வெப்சைட் முடங்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகளில் ஏதேனும் தில்லுமுல்லு செய்ய வெப்சைட் முடக்கப்பட்டிருக்கிறதோ என சந்தேகம் கிளம்பியிருக்கிறது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், பல்வேறு முறைகேடுகள் ஆட்சியில் இருந்ததால், Gen Z இளைஞர்கள் போராட்டம் நடத்தி ஹசீனாவை ஓடவிட்டனர். இதனையடுத்து இடைக்கால ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில்தான் நேற்று புதிய பிரதமருக்கான தேர்தல் நடந்து முடிந்தது.

சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்த போதும், பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தன. இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்றிரவு சில தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்ட்டன. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, 202 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 150 தொகுதிகளில் வெற்றிப்பெற்றால் ஆட்சியை அமைக்கலாம்.
பங்களாதேஷ் தேசியவாத கூட்டணி (BNP)
ஜமாத் கட்சி கூட்டணி
இஸ்லாமி அந்தலோன் பங்களாதேஷ்
என 3 கட்சிகள் தேர்தலில் முக்கிய கட்சிகளாக இருக்கின்றன. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, பங்களாதேஷ் தேசியவாத கூட்டணி (BNP) 155 இடங்களிலும், ஜமாத் கட்சி கூட்டணி 41 தொகுதிகளிலும், இஸ்லாமி அந்தலோன் பங்களாதேஷ் வெறும் 1 இடத்திலும் இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்த முடிவுகள் மூலம், பங்களாதேஷ் தேசியவாத கூட்டணிதான் ஆட்சியை அமைக்கப்போகிறது என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால், திடீரெனில் தேர்தல் முடிவுகளை காட்டும் வெப்சைட் திடீரென முடங்கியிருக்கிறது. உண்மையான முடிவுகள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஏதேனும் சதி நடக்கிறதா? என்று பல்வேறு தரப்பினரும் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications