இந்தியாவுக்கு குட்பை..பாகிஸ்தானுக்கு எதிராக செய்தி வெளியிட தடை! வங்கதேச ரேடியோ, சேனல்களுக்கு ஆர்டர்
டாக்கா: நம் நாட்டுடன் மோதி வரும் வங்கதேசம், பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு வழங்கும் வகையிலும் வங்கதேசம் செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தின் ரேடியோ, டிவி சேனல்களுக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு தற்போது அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். இதனால் இந்தியா - வங்கதேசம் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் வங்கதேசம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்ட தொடங்கி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டுடன் நெருக்கம் காட்டி வருகிறது. வங்கதேசம் என்ற நாடே பாகிஸ்தானில் இருந்து போர் மூலம் 1971ல் பிரிந்தது. அதற்கு நம் நாட்டு படை வீரர்கள் தான் உதவி செய்தனர். பாகிஸ்தான் வீரர்களை சரணடைய வைத்து இந்தியா தான் வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்று கொடுத்தது.
இதனால் இந்தியா - வங்கதேசம் உறவு என்பது காலம் காலமாக நன்றாக இருந்து வந்தது. இடையிடையே தான் அவ்வப்போது பிரச்சனை இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. அதேவேளயைில் பாகிஸ்தான் - வங்கதேசம் உறவு என்பது கடந்த 54 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. வங்கதேசம் உருவான பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் உளவு மற்றும் ராணுவ அதிகாரிகள் கடந்த மாதம் வங்கதேசம் சென்றனர். இதற்கு இடைக்கால அரசு மற்றும் அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தான் முக்கிய காரணம்.
இதற்கிடையே தான் தற்போது வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், அந்த நாட்டின் ரேடியோ மற்றும் டிவி சேனல் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வங்கதேசத்தின் பீட்டார் எனும் அரசு ரேடியோ செயல்பட்டு வருகிறது. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான பாடல்கள் மற்றும் வங்கதேச மக்கள் இனப்படுகொலை குறித்த பாடல்களை ஒலிபரப்ப கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்கதேசம் தனிநாடு கோரி பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக போரிட்டபோது கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்) மக்களை கொன்றதாகவும், இனப்படுகொலையை நிகழ்த்தியதாகவும் செய்திகள் வெளியிடக்கூடாது என்று டிவி சேனல், ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா, ஜில்பிகர் அலி புட்டோ, அயூப் கான், திகா கான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக செய்தி வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர்கள் தான் 1971 ம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் வசித்த மக்களின் மீது ராணுவத்தை ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்து போரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவர்களுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடக்கூடாது என்று வங்கதேசம் உத்தரவிட்டுள்ளது.
தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த உத்தரவின் பின்னணியில் 2 முக்கிய விஷயங்கள் உள்ளன. இதில் முதல் விஷயம் என்னவென்றால் முகமது யூனுஸ் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாளர். இந்தியாவுக்கு எதிரானவர். அவர் இடைக்கால ஆலோசகராக நியமிக்கப்பட்டபோதே இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது பாதிக்கப்படும். பாகிஸ்தான் - வங்கதேச உறவு பலப்படும் என்று கூறப்பட்டது. இப்போது அது அப்படியே நடக்கிறது. அதோடு 1971ல் வங்கதேசம் தனி நாடாக உருவாகும்போது பாகிஸ்தான் ராணுவம் மீது கிழக்கு பாகிஸ்தான் (இப்போது வங்கதேசம்) பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளை வைத்தது. பாகிஸ்தான் ராணுவம் பல லட்சக்கணக்கான மக்களை கொன்றுவிட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை முகமது யூனுஸ் ஏற்காத நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு புனிதர் பட்டத்தை கொடுக்க நினைக்கிறார்.
2வது விஷயம் என்னவென்றால் 1971ல் பாகிஸ்தான் - கிழக்கு பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் நுழைந்து மக்களை அடித்து கொன்று சித்ரவதை செய்தது. இதனால் ஏராளமான மக்கள் எல்லைகளை தாண்டி நம் நாட்டில் தஞ்சமடைந்தனர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஓடிவந்தனர். அவர்களை அகதிகளாக இந்தியா ஏற்றது.
ஆனால் தொடர்ந்து அதிகளவில் மக்கள் வெளியேறி இந்தியா நோக்கி வந்தனர். இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகவும், வங்கதேசம் தனி நாடு கோரும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாகவும் களமிறங்கியது. நம் நாட்டு ராணுவ வீரர்கள் வங்கதேசத்தை உருவாக்க பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டனர்.
நம் வீரர்களின் துல்லிய தாக்குதலால் நிலைக்குலைந்த பாகிஸ்தான் படை நம் நாட்டிடம் சரணடைந்தது. இதையடுத்து தான் வங்கதேசம் தனி நாடாக உருவானது. இப்போது பாகிஸ்தானுக்கு புனிதர் பட்டம் கொடுப்பதன் மூலம் வங்கதேசம் உருவாக நம் நாடு செய்த உதவியை மறைக்க முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications