சிறுபான்மையினர் மீதான தாக்குதல்... வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மத அந்தஸ்தை இழக்கும் இஸ்லாம்?
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்ற அந்தஸ்தை இஸ்லாம் இழக்கக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்கதேசம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் வசிப்போரில் 90 சதவீதம் பேர் முஸ்லீம்கள்(சன்னி), 8 சதவீதம் பேர் இந்துக்கள், 2 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா முஸ்லீம்கள். வங்கதேசத்தில் இந்துக்கள், ஷியா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் மீது சன்னி முஸ்லீம்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் பஞ்ச்கார் மாவட்டத்தில் கோவில் ஒன்று தாக்கப்பட்டதுடன், பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் எழுத்தாளர்கள், பிளாக்கர்கள் அடிக்கடி கொலை செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் இருக்கக் கூடாது என்று கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மத அந்தஸ்தை இஸ்லாம் இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications