வங்கதேச தேர்தலில் 232 தொகுதிகளில் ஷேக் ஹசினா கட்சி வெற்றி: மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது
டாக்கா: வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏற்கனவே 153 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 147 தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலை வங்க தேசத்தின் முக்கிய எதிர்கட்சியான வங்கதேச தேசிய கட்சி புறக்கணித்தது. தேர்தலை தடுக்கும் வகையில் 18 எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களிலும், கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
இந்நிலையில், தேர்தலை ஏராளமான மக்கள் புறக்கணித்ததால் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இதனால் தேர்தல் முடிவுகள் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற 147 தொகுதிகளில் 79 தொகுதிகளை அவாமி லீக் வேட்பாளர்கள் கைப்பற்றினர். அவாமி லீக்குடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ஜடியா கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமரும் தகுதியை அக்கட்சி பெற்றுள்ளது.
அவாமி லீக்கின் இதர 3 கூட்டணி கட்சிகள் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிறிய கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
எனவே 300 தொகுதிகளில் 232 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்ற ஷேக் ஹசினாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சி நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. வங்கதேசத்தின் பத்தாவது பிரதமராக ஷேக் ஹசினா பதவி ஏற்கும் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது உண்மையான வெற்றியல்ல என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications