மொத்த குடும்பமும் கொலை.. சிறைவாசம்.. வங்கதேசத்தின் சக்திவாய்ந்த தலைவர்.. யார் இந்த ஷேக் ஹசீனா?
டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்து வந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்ததால், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பியிருக்கிறார். வங்கதேசத்தில் வல்லமை மிக்க தலைவராக அறியப்பட்ட ஷேக் ஹசீனா யார்? என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நமது அண்டை நாடுகளில் ஒன்றான வங்க தேசத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்ததால் மாணவர்களிடையே பெரும் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டம் வன்முறையாகவும் மாறியது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் நிலைமை கைமீறியது. அந்நாட்டின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதற்கிடையே பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு வெளிநாடு சென்றதாக தகவல் வெளியானது. லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் வல்லமை மிக்க தலைவராக அறியப்பட்ட ஷேக் ஹசீனா யார்? என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
76-வயதான ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். வங்கதேசத்தின் நிறுவனரும் முதல் ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகள்தான் ஷேக் ஹசீனா. 1960 களில் டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே அவர் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார்.
1971 -களில் வங்களதேச விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.. அதன்பிறகு 1975 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஷேக் முஜிபூர் ரகுமான் மற்றும் அவரது மனைவி மூன்று மகன்கள் ராணுவத்தினரால் கொல்லபட்டனர். அப்போது ஷேக் ஹசீனா நாடு கடத்தப்பட்டு இருந்ததால் உயிர் தப்பினார்.
லண்டனில் இருந்த ஷேக் ஹசீனா, அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வங்கதேசத்தின் பெரிய அரசியல் கட்சியாக ஷேக் ஹசீனா கட்சி உள்ளது. 1980 -களில் ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாத் அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரமாக நடத்தினார். 1996-ம் ஆண்டு முதல் முறையாக வங்கதேசத்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அடுத்த முறை நடைபெற்ற தேர்தலில், அதாவது 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கலீதா ஜியா தலைமையிலான பி.என்.பி.யிடம் படு தோல்வியை சந்தித்தார். 2006-2008 வங்கதேசத்தில் நெருக்கடி ஏற்பட்டது. மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் ஹசீனா கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் அரியணை ஏறினார். அப்போது முதல், தொடர்ந்து அவருக்கு வெற்றி முகம் தான். தொடக்கம் முதலே பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்த ஷேக் ஹசீனா கடந்த ஜனவரியில் நாட்டின் 5-வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications