Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானியிடம் கெஞ்சும் வங்கதேசம்.. வசமாய் சிக்கிய முகமது யூனுஸ்.. ஆட்டம் போட்டவருக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

டாக்கா: நம் நாட்டிடம் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேசம், இப்போது முன்னணி தொழிலதிபரான அதானியிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. வங்கதேசத்தில் இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய உதவி செய்யும்படி அதானி நிறுவனத்திடம் வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

வங்கதேசம்.. நம் நாட்டின் அண்டை நாடாக உள்ளது. அந்த நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையான பிறகு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

bangladesh gautam adani

அதன்பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. அந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் தொடர்ந்து மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இருப்பினும் நம் நாடு தொடர்ந்து வங்கதேசத்துக்கு உதவி செய்து வருகிறது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரிசி வழங்கி வருகிறது. அதேபோல் மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கு உதவிடும் வகையில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் கூட வங்கதேசம் இன்னும் திருந்தவில்லை. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் இருப்பவர்கள் நம் நாட்டை சீண்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படியான சூழலில் தான் தற்போது நம் நாட்டின் முன்னணி தொழிலதிபரான அதானியிடம் வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது.

அதாவது தொழிலதிபர் கவுதம் அதானிக்கு, அதானி பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வங்கதேசத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017 ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின்போது வங்கதேச அரசுக்கும், அதானி குழுமத்துக்கும் இடையே மின்சார ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி வங்கதேசத்துக்கு 25 ஆண்டுகள் மின்சாரம் வழங்கும் ஒப்பந்தத்தை அதானி பெற்றார்.

அதானிக்கு ஜார்கண்ட்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் 2 மின்உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஒவ்வொன்றிலும் தலா 800 மெகாவாட் மின்சாரம் என்று மொத்தம் 1,600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்த மின்சாரம் அப்படியே வங்கதேசத்துக்கு வழங்கப்பட்டு வந்தது.

வங்கதேசத்தில் நடந்த வன்முறை, வர்த்தக பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது பற்றாக்குறையை நோக்கி சென்றது. இதனால் அதானி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை வங்கதேசத்தால் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அதானி நிறுவனம் வங்கதேசத்துக்கு வழங்கும் மின்சாரத்தை பாதியாக குறைத்தது. வங்கதேசத்துக்கு மின்சாரம் வழங்க இருந்த 2 மின்ஆலைகளில் ஒன்று நவம்பர் 1ம் தேதி மூடப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது வங்கதேசம் அதானியிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. வழக்கம்போல் 1,600 மெகாவாட் மின்சாரத்தை அதானி நிறுவனம் வங்கதேசத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக பிடிடிபி எனும் வங்கதேச மின் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது ரெசால் கரீம் என்பவர் கூறியதாவது:

‛‛வங்கதேசம் அதானிக்கு செலுத்த வேண்டிய பணத்தை நிலுவை வைத்துள்ளது. இப்போது மாதம் 85 மில்லியன் அமெரிக்க டாலரை வங்கதேசம் அதானி நிறுவனத்துக்கு வழங்குகிறது. இந்த தொகையை அதிகரிக்க முயற்சி செய்கிறோம். அதானி நிறுவனத்திடம் எங்களுக்கு உள்ள நிலுவை தொகையை குறைக்க நாங்கள் விரும்புகிறோம்.

எங்களுக்கும், அதானிக்கும் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது இந்தியாவில் ஒரு மின் அலகில் இருந்து மட்டுமே வங்கதேசத்துக்கு மின்சாரம் வருகிறது. 2வது அலகில் இருந்தும் மின்சாரத்தை வங்கதேசத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஏனென்றால் எங்களுக்கு மின்சாரம் தேவையாக உள்ளது. நேற்று முதல் 2வது அலகில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிக அதிர்வு காரணமாக அது நடக்கவில்லை'' என்றார். இதன்மூலம் மின்சாரம் கேட்டு அதானி நிறுவனத்திடம் வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது.

மேலும் தற்போது அதானி மற்றும் வங்கதேசம் இடையே சுமூகமாக உறவு என்பது இல்லாத நிலை உள்ளது. ஷேக் ஹசீனா னா ராஜினாமாவுக்கு பிறகு அதானி நிறுவனத்துக்கும் வங்கதேச இடைக்கால அரசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அதானி நிறுவனம் சார்பில் ஒரு தகவல் வெளியிடப்பட்டது. அதன்படி வங்கதேசம் அதானி நிறுவனத்துக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலரை நிலுவை தொகையாக வைத்துள்ளது என்று கூறியது. இதற்கு வங்கதேசம் மறுப்பு தெரிவித்தது. நிலுவை தொகை என்பது 900 மில்லியன் அமெரிக்க டாலர் இல்லை. 650 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டும் தான் என்று வங்கதேசம் மின்வாரியம் தெரிவித்தது.

அதோடு இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு விற்பனை செய்யப்படும் பிற நிறுவனங்களின் மின்சார விலையின் சராசரியை ஒப்பிடும்போது அதானி நிறுவனத்தின் மின்சாரத்துக்கு 55 சதவீதம் அதிக கட்டணம் செலுத்தப்படுகிறது. இதற்கு ஷேக் ஹசீனா, அதானி குழுமத்துடன் போட்ட ஒப்பந்தம் தான் காரணம் என்று குற்றம்சாட்டியது. அதோடு இதுதொடர்பான வழக்கை விசாரித்த வங்கதேசம் நீதிமன்றம் அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டது. இந்த நிபுணர் குழு விசாரித்து வரும் சூழலில் விரைவில் அறிக்கை தாக்கலாகும். அதன்பிறகு ஒப்பந்தம் தொடர்பாக மறுபேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளது.

மேலும் இனி வரும் காலங்களில் வங்கதேசத்துக்கு மின்சார தேவை என்பது அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் காலம் என்பதால் மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு சற்று குறைந்து இருந்தது. இனி கோடைகாலம் தொடங்கும் என்பதால் வங்கதேசத்துக்கு அதானியின் மின்சாரம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் வங்கதேசத்துக்கு மீண்டும் அதானி நிறுவனம் 2வது அலகில் இருந்து மின்சாரம் வழங்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+