இந்தியாவுக்கு எதிரான மாணவர் தலைவரின் கனவை நிறைவேற்ற.. உறுதியேற்ற வங்கதேச தலைவர் யூனுஸ்!
டாக்கா: இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் வங்கதேசத்தின் மாணவர் தலைவரான ஹாடி. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்நிலையில், ஹாடியின் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த வங்கதேச தலைவர் யூனுஸ், "நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்" என உறுதியேற்றுள்ளார்.
இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும், இந்தியா வங்கதேசத்தை கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறி இந்தியாவுக்கு எதிரான கருத்தியலை உருவாக்கிய ஒருவரின் கனவை, யூனுஸ் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருப்பது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஹாடி?
இவரது முழுப்பெயர், ஷெரீப் இஸ்மான் ஹாடி. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியில் மாணவர் அமைப்பின் பங்கு முக்கியமானது. அப்படியான மாணவர் அமைப்பு ஒன்றின் தலைவர்தான் இந்த ஹாடி.
கடந்த 1994-ல் ஜலோகாட்டி நல்சிட்டி உபாசிலாவில் பிறந்த இவர், தனது தீவிர அரசியல் கருத்துகளால் அறியப்பட்டார். இன்கிலாப் மஞ்சோ மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவராகவும் பங்காற்றினார். இந்தியாவுக்கு எதிரான விமர்சகராகவும், ஜூலை எழுச்சிப் போராளியாகவும் பார்க்கப்பட்ட ஹாடி, திராக்கா-8 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
தற்போதைய போராட்டத்திற்கு காரணம்
டிசம்பர் 12 அன்று, வங்கதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது, பல்டன் கல்வர்ட் சாலையில் ஆட்டோ ரிக்ஷாவில் சென்ற இவர் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தலையில் காயமடைந்த அவர், டாக்கா மருத்துவக் கல்லூரி, எவர்கேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், நிலைமை கவலைக்கிடமானதால் அவர் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், டிசம்பர் 18ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து டென்ஷனான இன்கிலாப் மஞ்சோ அமைப்பு, வன்முறை, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டது. இதனால், 'தி டெய்லி ஸ்டார்' மற்றும் 'புரோதோம் அலோ' ஆகிய இரண்டு ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாயின.
இந்தியாவுக்கு எதிராக திரும்புகிறதா வங்கதேசம்?
இந்த போராட்டம் இத்துடன் நிற்கவில்லை. இந்தியாவின் துணை தூதரகத்தின் மீது கல்வீச்சு சம்பவத்திலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஹாடி படுகொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என்றும், கொலையாளி இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கிறார் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இந்தியாவுக்கு எதிரான திசையில் தற்போது வங்கதேச இளைஞர்கள் சென்றுக்கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் அந்நாட்டின் தலைவர் யூனுஸ் கூறியிருப்பது கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன சொன்னார் யூனுஸ்?
சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஹாடியின் உடல், வங்கதேசத்திற்கு கொண்டுவரப்பட்டது. நேற்று அவரது உடல் கவிஞர் காஜி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த மரணம் நாடு முழுவதும் கொந்தளிப்பை தூண்டியிருக்கிறது. இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த யூனுஸ், ஹாடியின் இலட்சியங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக உறுதியளித்திருந்தார். மேலும் அவரது நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் தேசம் மதிக்கும் என்றும் கூறினார்.
"நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று உங்களுக்கு உறுதியளிக்க வந்துள்ளோம்" என்று யூனுஸ் கூறியிருப்பது இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த விவகாரத்தில் யூனுஸ் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications