சுவிஸ் வங்கியில் யாரெல்லாம் கணக்கு வைத்துள்ளனர்? இந்தியாவிடம் அளிக்கப்பட்ட ஷாக்கிங் பட்டியல்!
பல ஆண்டு முயற்சிக்கு பின் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரம் குறித்த பட்டியல் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சுவிஸ்: பல ஆண்டு முயற்சிக்கு பின் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரம் குறித்த பட்டியல் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கியில் இந்திய தொழிலதிபர்கள் பலர் பணம் சேர்த்து வைத்துள்ளனர். அங்கிருக்கும் பல வங்கிகளில் இப்படி பணம் சேர்த்து வைத்துள்ளனர். இதில் முறைகேடாக கருப்பு பணமும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை மீட்பதாக மத்திய அரசு பல முறை உறுதியளித்தது.

ஆனால் இதில் வெளிப்படையாக, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் முதல்முறையாக சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரம் குறித்த பட்டியல் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 75 நாடுகளுக்கு இதுபோன்ற பட்டியலை சுவிஸ் பெடரல் வங்கி பகிர்ந்து இருக்கிறது. Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் பகிர்ந்து உள்ளது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பட்டியல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் சுவிஸில் உள்ள வங்கிகளில் தற்போது கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் 2018 மற்றும் அதற்கு பின் கணக்கை நீக்கிய நபர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
2018க்கு பிறகுதான் சுவிஸ் வங்கி கணக்குகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான செயல்பாடுகள் துவங்கியது. பல நாடுகள் அப்போதுதான் இதில் வேகம் காட்டியது. அதனால் அந்த சமயத்தில் பலர் தங்கள் கணக்குகளை மூடினார்கள். ஆகவே இவர்களையும் கண்டறியும் பொருட்டு, இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது .
ஆனால் இதில் இருப்பவர்களின் பெயர்கள் இன்னும் வெளியாகவில்லை. இதன் மூலம் பெரிய அளவில் இந்தியாவின் கருப்பு பண முதலைகள் கண்டறியப்படுவார்கள் என்று கூறப்படுகிறது . பல வருட முயற்சிக்கு பின் முதல்முறை இப்படி பட்டியல் ஒன்றை சுவிஸ் வங்கியிடம் இருந்து நேரடியாக இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications