எப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து!
ஒபாமா - மிச்செல் தம்பதி நேற்று 26-வது திருமண நாளை கொண்டாடினர்.
அமெரிக்கா: முன்னாள் அதிபர் ஒபாமா - மிச்செல் தம்பதி நேற்று தங்களுடைய 26-வது திருமண நாளை கொண்டாடினார்கள்.
புரிதலுடன் கூடிய நேசம் கலந்த காதல் அளவு கடந்தும், தூய்மையானதாகவும் மட்டும் ஒரு மனிதனுக்கு கிடைத்துவிட்டால் வாழ்க்கையின் உச்சத்திற்கும் செல்லலாம் என்பதற்கு உதாரணம்தான் ஒபாமா. இவர் மீது மனைவி மிச்சேல் வைத்த பாசத்தை அளந்து சொல்ல முடியாது.

காதல் ஜோடி
வெள்ளை மாளிகைக்கு உள்ளே ஒரு கறுப்பினத்தவரையும் நுழைய வைக்க முடியும் என்பதற்கு ஒபாமா மீது மிச்சேல் வைத்த புனிதமான காதல் ஒரு முக்கியமான காரணமாகும். இந்த தம்பதிகள் குறித்த செய்திகள் என்றாலே எப்போதுமே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பெரும்பாலாருக்கு வந்துபோகும். அதுவும் இந்த ஜோடியின் காதல் கதைகள் என்றால் சொல்லவே வேணாம்... வைரல்.. வைரல்.. வைரல்தான்!

ரொமாண்டிக் போஸ்
அதிபராக ஒபாமா இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மனைவி மிச்செல் பற்றின பேச்சுக்கள் அனைத்துமே அவருக்கு மரியாதை வழங்கக்கூடியதாக இருக்கும். மிச்சேலின் எத்தனையோ விஷயங்களையும், முக்கியமான சம்பவங்களையும் ஒபாமா வெளிப்படையாகவே பெருமைபட கூறி வந்திருக்கிறார். உலகில் வேறு எந்த நாட்டு தலைவர்களும் மனைவி மேல் உள்ள காதலை இவ்வளவு வெளிப்படுத்தியதில்லை, அதேபோல் மனைவியுடன் சேர்ந்து பொது இடங்களில் ரொமாண்ட்டிக் போஸ் கொடுத்ததும் ஒபாமா போல இல்லை.
|
பரஸ்பர வாழ்த்துக்கள்
அதேபோல ஒவ்வொரு ஆண்டு திருமண நாள் அன்றும் இந்த தம்பதி சமூக வலைதளங்களை தங்கள் பக்கம் கட்டிப் போட்டு விடுவார்கள். ட்விட்டரில் தம்பதிகளின் பரஸ்பர வாழ்த்துக்களில் அன்பு தெறித்து ஓடும். நேற்று இந்த தம்பதி 26-வது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் வழக்கம்போல் குவிந்தன.

மிகச்சிறந்த நபர்
தன் மனைவிக்கு ஒபாமா கூறிய வாழ்த்து ஒன்றில், "26 ஆண்டுகளாக தனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாழ்க்கைத் துணை.. எப்போதுமே என்னை சிரிக்க வைக்கிறாய்.. இந்த உலகில் சேர்ந்து வாழ பிடித்தமான ஒரு நபர்" என்று அழகான முறையில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
|
நீங்கள் பொக்கிஷம்
ஒபாமாவின் இந்த வரிகளுக்கு நன்றி தெரிவித்த மிச்சேல் பதில் ட்வீட் போட்டுள்ளார். " 26 வருடங்களாக அன்பு, நம்பிக்கை, மரியாதை அளிப்பவர். அற்புதமான குழந்தைகளையும், என்னையும், உயர்த்தி பிடிப்பதும், கவுரவ படுத்துவதும் என எல்லாவற்றையும் செய்யக்கூடிய ஒரு மனிதராக இருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், எங்களுக்கு நீங்கள் உண்மையிலேயே ஒரு பொக்கிஷமாக இருக்கிறீர்கள் என்பதை நான் நினைவு நினைவுபடுத்தி கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

வைரல் வரிகள்
இருவருமே தங்கள் போஸ்ட்களில் இரண்டு புகைப்படங்களையும் போட்டுள்ளார்கள். தற்போது சமூகவலைத்தளங்களில் தம்பதிகளின் வாழ்த்துக்களுடன் கூடிய வைர வரிகள் வைரலாகி வருகிறது. இருவரும் சிறந்த தம்பதி என்று கூறி திருமண நாள் வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.
மிச்சேலின் தீரா காதல்ஒபாமா மீது இருக்கும்வரை இதுபோன்ற வாழ்த்துக்கள் வருடந்தோறும் வந்து கொண்டுதான் இருக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications