காதலர் கிடையாது..'காம்ரேட்'! வடகொரிய ஸ்மார்ட்போன்கள் அட்டூழியம்.. 'ட்ஸ் வெரி ராங் ப்ரோ'

Subscribe to Oneindia Tamil

சியோல்: வடகொரியா, உலக வழக்கங்களிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வடகொரியா ஸ்மார்ட்போன் ஒன்றை ஆய்வு செய்ததில், இந்த தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்று நிரூபணமாகியுள்ளது என்று பிபிசி கூறியிருக்கிறது.

வடகொரியாவிலிருந்து ஸ்மார்ட்போன் ஒன்று கடத்தப்பட்டிருக்கிறது. இந்த போனை கடந்த ஆண்டு பிபிசி ஆங்கில ஊடகம் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தியிருந்தது. பரிசோதனையில் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.

North Korea smartphone BBC

வடகொரியாவில் 2013ம் ஆண்டு முதல்தான் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதிலும் ஆண்ட்ராய்டு OS-க்கு பதில், 'ரெட் ஸ்டார் OS' எனும் உள்ளூர் தயாரிப்பு OS மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல், ஜியோ மாதிரி, தனியார் நெட்வொர்க் வழங்குநர்கள் அங்கு கிடையாது. அரசாங்கம் இணையதளத்தையும், செல்போன் தொடர்பையும் வழங்கும் பொறுப்பை கையில் வைத்திருக்கிறது. ஆனால் 3ஜி மட்டுமே கிடைக்கும். 4ஜி, 5ஜி எல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

செல்போன் பயனாளர்களால் புகைப்பட எடிடிங் ஆப்களை கூட டவுன்லோடு செய்ய முடியாது. இரவு 10:30 முதல் காலை 5:30 வரை இணையம் முழுமையாக முடக்கப்பட்டிருக்கும். பயனர் செயல்பாடுகள் 24/7 கண்காணிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜ் என்ன என்பதை அரசால் இடைமறித்து படிக்க முடியும். என பிபிசி கூறியுள்ளது. இதையெல்லாம் படிக்கும்போதே.. என்னடா இது? என்று தோன்றுகிறதா? இதைவிட கொடுமையான விஷயம் ஒன்று இருக்கிறது.

தென்கொரியாவில் 'oppa' என்கிற வார்த்தை காதலர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வடகொரிய செல்போனில் நீங்கள் 'oppa' என டைப் செய்தால், அதற்கு பதில் 'Comrade' என்கிற வார்த்தை வரும். அதாவது 'தோழர்' என்று வரும். பக்கத்திலேயே, 'இந்த வார்த்தையை உடன் பிறந்தவர்களிடம் மட்டும் பயன்படுத்த வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருக்கும். அதேபோல 'தென்கொரியா' என்று எழுதினால், அது தானாகவே 'பொம்மை நாடு' என்று மாறிவிடும்.

நமக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை இருந்தபோது, 'பாக்' எனும் எழுத்தை 'ஸ்ரீ' என சிலர் மாற்றினார்களே.. அப்படியான அதி மேதாவிகளின், ஒன்றுவிட்ட சகோதரர்கள் வடகொரியாவில் இப்படியான உப்பு சப்பில்லாத வேலையை பார்த்திருப்பார்களோ என சந்தேகம் எழுகிறது.

இதைவிட இன்னொரு ட்விட்ஸ்ட் என்னவெனில், இந்த ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் தானாக ஸ்கிரீன்ஷாட் எடுத்தக்கொள்கிறது. அப்படி எடுக்கப்பட்ட படங்கள், செல்போனில் பயனாளர்களுக்கே தெரியாத ஒரு ரகசிய ஃபைலில் சேமித்து வைக்கப்பட்டு, மாதம் ஒருமுறை அரசு டெக் அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. இவை எல்லாம் தானாக நடக்கும் செயல்களாகும். பயனாளர்கள் நினைத்தால் கூட இதை தடுக்க முடியாது என்று பிபிசி கூறியுள்ளது.

ஆனால் பிபிசி கூற்றில் சில சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், இதுவரை தென் கொரிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட எல்லா செய்திகளும் வடகொரியாவுக்கு எதிரான டிஜிட்டல் பிரசார அடிப்படையிலான செய்தியாகத்தான் இருந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது பிபிசி மட்டும் 100% உண்மையை சொல்லுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

எது எப்படி இருந்தாலும், காதலர்களை 'காம்ரேட்' என்று அழைப்பது, 'ட்ஸ் வெரி ராங் ப்ரோ'. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+