நாட்டை பாதுகாக்க தயாராக இருங்கள்... ஜி ஜின்பிங் பேச்சு... இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்த நேரத்திலும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு எதிர்கொள்ளச் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார்.

Recommended Video

    நாட்டை பாதுகாக்க தயாராக இருங்கள்.. மறைமுக எச்சரிக்கை விடுத்த Xi Jinping

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் அதிகப்படியான வீரர்களை எல்லையில் குவித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவியது.

    அதைத்தொடர்ந்து ராணுவ உயர் அதிகாரிகள் தரப்பில் 12 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரே எல்லையிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெற இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

    போருக்குத் தயாராக இருங்கள்

    போருக்குத் தயாராக இருங்கள்

    இந்நிலையில், இன்று அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நம் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை நிலையற்று, நிச்சயமற்ற நிலையில் உள்ளது. முழு ராணுவமும் போருக்கு தயார்நிலை எந்நேரமும் இருக்க வேண்டும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்த நேரத்திலும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு எதிர்கொள்ளச் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

    இந்தியா-சீனா

    இந்தியா-சீனா

    எல்லையில் சில இடங்களில் சீனா தனது ராணுவத்தைத் திரும்பப் பெற்றிருந்தாலும், இன்னும் பல இடங்களில் சீனா தனது வீரர்களை திரும்பப்பெறவில்லை. இது குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையிலேயே ஜி ஜின்பிங் பேசியுள்ளதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டிரம்பும் சீனாவும்

    டிரம்பும் சீனாவும்

    ஆனால், மறுபுறம் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கவே ஜி ஜின்பிங் இப்படிப் பேசியதற்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்போது மோசமான உறவே தொடர்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த போது, அவர் அனைத்திற்கும் சீனா மீதே குற்றஞ்சாட்டினார். கொரோனா வைரசைக்கூடச் சீனா திட்டமிட்டுப் பரப்பியதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

    அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

    அதிபராக பைடன் பதவியேற்ற பின்னர், சீனாவை அமெரிக்கா எதிர்கொள்ளும் முறை மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிராகக் கடினமான முடிவுகளை எடுத்துவிட்டு, சீனாவை எதிர்க்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பைடனும் டிரம்பை போலவே சீனாவுக்கு அதிருப்தி அளிக்கும் வகையிலேயே வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறார். எனவே, இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட ஒரு மெசேஜாகவே பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+