நாசா, இஸ்ரோவை தூக்கிச் சாப்பிட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.. தனி நபராகக் கொடி நாட்டிய எலோன் மஸ்க்!
உலகின் மிகப்பெரிய ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க்தான் இன்று உலகிலேயே மிகவும் சந்தோஷமான மனிதராக இருப்பார். உலகத்தின் பெரிய ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பிவிட்டார்.
அதேபோல் தன்னுடைய டெஸ்லா காரையும் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிவிட்டார். உலகம் சில வருடம் முன்பு வரை அவரை ஒரு முட்டாள், தோல்வி அடைந்தவன், காணாமல் போய் விடுவாய் என்றது.
ஆம் நான் காணாமல் போவேன் செவ்வாய் கிரகத்திற்குக் காணாமல் போவேன் என்று நிரூபித்துள்ளார். இதோ இப்போது செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிவிட்டார். அவருடைய சாதனை கதை புல்லரிக்க வைக்கும் ஒன்று.

கணினி
1971ல் ஜூன் 28ம் தேதி எலோன் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். 10 வயதிலேயே இவருக்கு கம்ப்யூட்டர் ஆசை வந்துள்ளது. 12 வயதில் சுயமாக 'பிளாஸ்டர்' என்ற கணினி கேம் உருவாக்கி அதை 500 டாலருக்கு விற்று இருக்கிறார். இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

தொடக்கம்
அப்பாவிடம் 28 ஆயிரம் டாலர் பணம் வாங்கி 'சிப் 2' என்ற நிறுவனத்தைத் தம்பி கிம்பாலுடன் சேர்ந்து தொடங்கியுள்ளார். அது ஒரு 'டிராவல் கைடு' நிறுவனம். அது வளர்ந்த பின் 307 மில்லியனுக்கு விற்று இருக்கிறார். பின் அந்த பணத்தை வைத்து 'எக்ஸ்.காம்' என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அது ஆன்லைன் பேங்கிங் சர்விஸ் செய்யும் நிறுவனம்.

பேபால் நிறுவனம்
எக்ஸ்.காம் நிறுவனத்தை தன் போட்டி நிறுவனத்துடன் இணைத்து 'பேபால்' எனப் பெயரிட்டு ஓனர் ஆனார். ஆனால் அதோடு முடிக்காமல் அதையும் விற்க முடிவெடுத்தார். அப்போதுதான் செவ்வாய்க்கு போகும் ஆசை வந்துள்ளது. 2002ல் அதை இ-பே நிறுவனத்திற்கு 180மில்லியன் டாலருக்கு விற்றார்.

ரஷ்யா சென்றார்
ராக்கெட் வாங்க முடிவெடுத்து உடனடியாக ரஷ்யா சென்றார். அங்கு மிஸைல் குறித்து பேரம் பேசினார். 1 ராக்கெட்டுக்கு 8 மில்லியன் காசு கேட்டு இருக்கிறார்கள். இவர் அவ்வளவு கொடுக்க முடியாது என்றுள்ளார். ''அப்படி என்றால் நாங்கள் தர மாட்டோம் போய் வேறு வேலை பாருங்கள்'' என்றுள்ளனர்.

பதில்
மேலும் ''என்ன உங்களிடம் பணம் இல்லையா என்றும் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்''. அதற்கு இவர் ''என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. அதனால் நானே ராக்கெட் செய்யலாம் என்று இருக்கிறேன்'' என்றுள்ளார். அங்கு எல்லோரும் அவரைப் பார்த்துச் சிரித்துள்ளனர்.

தொடங்கினார்
ஆனால் மனிதன் விடவில்லை. அவர்கள் சொன்ன விலையை விட 97 சதவிகித குறைவான விலையில் ஒரு ராக்கெட் செய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளார். வேகமாகச் செயலில் இறங்கி 2002 மே மாதம் 100 மில்லியன் முதலீடு செய்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். முதல் ராக்கெட் வேலையும் தொடங்கியது.

அவ்வளவுதான்
4 வருடத்தில் முதல் ராக்கெட்டை கருத்தாக உருவாக்கினார்கள். 2006ல் பறந்த அந்த ராக்கெட் 33 நொடியில் வெடித்துச் சிதறியது. கனவு கலைந்தது. 2007, 2008 என வரிசையாக அனுப்பிய ராக்கெட் எல்லாம் தோல்வி அடைந்தது. நிறுவனம் திவாலாகும் நிலைக்குச் சென்றது.

வெற்றி வெற்றி
ஆனால் வங்கியில் இருந்த மொத்த காசையும் எடுத்தார். கடைசியாக முயற்சி செய்தார். ஆம், 2008 செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஃபல்கான் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தனியார் விண்ணில் ஏவிய முதல் ராக்கெட் ஆகும் இது. இதனால் டிசம்பர் 23ம் தேதி நாசா நிறுவனம் 1.6 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டது. விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்குப் பொருட்கள் அனுப்பும் ஒப்பந்தம் ஆகும் இது.

சாதனை
பொதுவாக ஒரு ராக்கெட் பூமியை விட்டு வெளியே சென்றதும் திரும்பி பூமிக்கு வரும் போது காற்றில் உராய்வு ஏற்பட்டுத் தீ பற்றி எரியும். அதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்தது. 2011 மீண்டும் பயன்படுத்த கூடிய ராக்கெட்டை விண்ணில் ஏவ முயற்சி செய்தார்கள். தொடர்ச்சியாக எல்லாம் தோல்வி. விடாமல் மீண்டும் முயன்று 2015ல் வெற்றி பெற்றார்கள். 2017ல் அதையே கடலில் இறக்கி வெற்றிபெற்றார்.

இப்போது
இதோ இப்போது உலகின் பெரிய ராக்கெட்டான ''ஃபல்கான் ஹெவி'' ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இதில்தான் அந்த டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் இருக்கிறது. இது அவருக்குச் சொந்தமான அவர் பயன்படுத்திய கார் ஆகும். இப்போது சொல்லுங்கள் அவரை விட உலகில் சந்தோசமான மனிதன் யார் இருக்க முடியும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications