பின்னழகை எடுப்பாக்க ஊசி போட்டு உயிரை இழக்கும் வெனிசுலா பெண்கள்
காரகஸ்: வெனிசுலாவில் பின்னழகை எடுப்பாக ஆக்க ஊசிப் போட்டுக் கொள்ளும் பெண்கள் பின்விளைவுகள் ஏற்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் பல அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்ற நாடு வெனிசுலா. வெனிசுலா இதுவரை 6 பிரபஞ்ச அழகி, உலக அழகி மற்றும் சர்வதேச அழகிப் பட்டங்கள் மற்றும் 1 மிஸ் எர்த் பட்டத்தை வென்றுள்ளது.
இப்படி அழகிப் போட்டிகளில் வெல்லும் வெனிசுலா பெண்கள் ஆபத்தான ஒரு ஊசியால் உயிர் இழக்கின்றனர்.

பின்னழகை கூட்ட
வெனிசுலா நாட்டு இளம்பெண்கள் தங்கள் பின்னழகை எடுப்பாக காட்ட சிலிகான் ஊசி போட்டுக் கொள்கின்றனர்.

ஊசிக்கு தடை
சிலிகான் ஊசிக்கு வெனிசுலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் திருட்டுத் தனமாக அந்த ஊசியை அழகு நிலையங்கள் மற்றும் ஜிம்களில் வைத்து போட்டுக் கொள்கின்றனர்.

உயிரைப் பறிக்கும் அழகு
பின்னழகை எடுப்பாக்கப் போடும் ஊசியால் கடந்த 12 மாதங்களில் மட்டும் 17 பெண்கள் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்த ஊசியை பயன்படுத்துவதை பெண்கள் நிறுத்தவில்லை.

30 சதவீத பெண்கள்
வெனிசுலாவில் உள்ள பெண்களில் 18 முதல் 50 வயது வரை உள்ள 30 சததவீதம் பேர் இந்த சிலிகான் ஊசியை பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 2,000 பெண்கள் இந்த ஊசியை வீட்டிலோ அல்லது சட்டவிரோத மையங்களிலோ போட்டுக் கொள்கிறார்களாம். இந்த ஊசியின் விலை ரூ. 505 ஆகும்.

வங்கிக் கடன்
வெனிசுலா பெண்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 20 சதவீதத்தை அழகு சாதன பொருட்களுக்கு செலவிடுகிறார்களம். மேலும் மாதாமாதம் குறைந்தது 4,000 பெண்கள் அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள பெண்களுக்கு வெனிசுலாவில் உள்ள பல வங்கிகள் கடன் தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications