நாராயணா... ஒரு மூட்டைப் பூச்சிக்கு இந்த அக்கப் போரா நாராயணா... ஐ.நாவில்!
ஐ.நா.: எங்க வீட்ல, உங்க வீட்ல, அவங்க வீட்ல மட்டும்தான் மூட்டைப் பூச்சி தொல்லை இருக்குன்னு நினைக்காதீங்க மக்களே.. ஆனானப்பட்ட ஐ.நாவிலேயே இந்தத் தொல்லை வந்து விட்டதாம்.
சமீபத்தில் அங்கு சில மூட்டைப் பூச்சிகளைப் பிடித்துள்ளனர். ஐ.நா. சபையில் இப்படி மூட்டைப் பூச்சிகள் சிக்கியது நியூயார்க் நகர மக்களையும் அதிர வைத்துள்ளது.
என்னது நம்ம நாட்டில், நம்ம ஊரில் மூட்டைப் பூச்சியா என்று அவர்கள் அதிர்ச்சி காட்டியுள்ளனர். நியூயார்க் நகருக்குள்தான் ஐ.நா. சபை அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரத்தத்தைக் குடிக்கும் தீவிரவாதிகளை தடுக்க முடிந்த அமெரிக்கர்களால் இந்த ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளை ஒழிக்க முடியாமல் போனது ஆச்சரியம்தான்.

2 அலுவலகத்தில்
ஐ.நா. செயலக கட்டடத்தின் 34வது மாடியில் இரண்டு இடங்களில் மூட்டைப் பூச்சிகள் சிக்கினவாம். இதையடுத்து அந்தப் பகுதியை சுத்தம் செய்துள்ளனர். உடனடியாக பூச்சி மருந்து அடிக்கப்பட்டு மேலும் பூச்சிகள் வராத அளவுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

நிலைமை கட்டுக்குள் உள்ளதாம்
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பர்ஹாத் ஹக் கூறியுள்ளார். இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மிகச் சிறிய அளவில்தான் மூட்டைப் பூச்சிகள் சிக்கின. பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. 2 அலுவலகப் பகுதிகளில் மட்டுமே இருந்தது. அந்த இரண்டு இடத்தையும் ஒருவர்தான் பயன்படுத்தி வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது.

6 பேர் தற்காலிக இடமாற்றம்
மூட்டைப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகே வேலை பார்த்து வந்த 6 பேர் தற்போது தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த இடத்தை பூச்சி மருந்து அடிப்பவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனராம். தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனராம்.

கடைசியாக 2010ல்
ஐ.நா. சபையில் கடைசியாக 2010ம் ஆண்டுதான் மூட்டைப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அது முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்தது. தற்போது அது மீண்டும் தலை தூக்கியுள்ளது.

வீட்டில் இல்லை
இருப்பினும் வெளிநாட்டு தூதர்கள் தங்கும் இல்லங்களில் மூட்டைப் பூச்சி தொல்லை இதுவரை இல்லை என்றும், இதுதொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என்றும் ஐ.நா. வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா அமெரிக்காதான்.. மூட்டைப் பூச்சி வந்தாலும் கூட பெர்பெக்ட்டா ஆக்ஷன் எடுக்கிறாங்களே!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications