அவசரமாகத் தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்... காரணம் ஒரு குட்டி ’கருப்புத் தேனீ’
லண்டன்: இங்கிலாந்தில் ஒரு குட்டித் தேனீயால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, விமானம் ஒன்று தரையிறக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து டப்ளின் நகருக்கு பிளைபி ஏர்லைன்சின் BE384 பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை பைலட் உணர்ந்தார். எனவே, விபத்தைத் தவிர்க்க மீண்டும் விமான நிலையத்திற்கே விமானத்தைத் திருப்பினார் பைலட்.

விமான நிலையத்தில் பத்திரமாக பயணிகள் வெளியேற்றப் பட்டனர். பின்பு விமானத்தை முழுவதுமாக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் வால் பகுதியில் குட்டியாக ஒரு கருப்புத் தேனீ இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
விமானத்தின் வால் பகுதியில் உள்ள இறக்கையில் சிக்கிய அந்தத் தேனீதான் தொழில்நுட்பக் கோளாறுக்கு காரணமானது என்பது உறுதியானது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கே முதன்மையான முக்கியத்துவம் அளிப்போம்" என்றார்.
இந்த சம்பவத்தால், அந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
அப்போது பயணி ஒருவர், ‘தேனீ(bee) மோதியதால் flybe விமானம் flybee விமானமாகிவிட்டது' என்று டைமிங் ஜோக் அடிக்க, சிரித்தபடி பயணிகள் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications