விநோத முயற்சி... டாய்லெட்டில் 116 மணி நேரம் அமர்ந்து சாதனை
ஆஸ்டெண்ட்: உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த நபர், ஐந்து நாட்கள் கழிப்பறையில் அமர்ந்திருந்தார்.
பஸ் டிரைவராக இருக்க விரும்பிய, 48 வயதான ஜிம்மி டி ஃப்ரென்னே, 165 மணிநேரம் கழிப்பறையில் உட்காருவது என்ற சவாலை ஏற்றார். ஆனால் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து விட்டார். இதனால், 116 மணி நேரத்தில் சாதனை முயற்சி முடிந்தது.

இதுகுறித்து பேசிய ஜிம்மி டி ஃப்ரென்னே, மற்றவர்களை விட, தன்னை தானே கேலி செய்வது மிகச் சிறந்த நகைச்சுவை என்றார். மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டேன். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது என்பது எளிதானது அல்ல.
நான் மிகவும் சோர்வாக இருந்தேன், என் கால்கள் வீங்கி விட்டன, ஆனால் நான் சாதனை செய்வேன் என்று நம்பினேன். இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக்க முயற்சித்து வருகிறேன் என்றும் கூறினார்.
கின்னஸ் உலக சாதனையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக கழிப்பறையில் உட்கார்ந்து சாதனை படைத்தது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், எனக்கு முன்பாக, ஒருவர் 100 மணி நேரத்திற்கு மேல் கழிப்பறையில் அமர்ந்திருந்ததை கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த வித்தியாசமான முயற்சி பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications