பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி பெல்ஜியத்தில் கைது !
பெல்ஜியம்: பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டு வந்த தீவிரவாதி முகமது அப்ரினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 130 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவத்தில் பாரீஸ் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த அப்துல் ஹமீது அபௌதுக்கு நெருக்கமான ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சராப் எல் முவாதான் கடந்த 24ம் தேதி சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானார். அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் முவாதான் உள்பட 10 தீவிரவாதிகள் பலியாகினர்.
இந்நிலையில், பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டு வந்த முகமது அப்ரினி என்பவரை பெல்ஜியம் போலீசார் இன்று கைது செய்தனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதி பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியாகினர். இதையடுத்து பெல்ஜியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பேர் பிடிபட்டனர்.
இந்நிலையில் பாரீஸ் தாக்குதல்களுக்கு தொடர்புடைய முக்கிய தீவிரவாதி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு இந்த தாக்குதலில் சம்பந்தம் இருப்பதாக போலீசார் சந்தேகின்றனர். பிடிபட்ட தீவிரவாதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications