பத்தாயிரம் முட்டைகளால் உருவான 'மெகா ஆம்லெட்' ... பெல்ஜியம் மக்களின் பிரமாண்டம்

வசந்த கால விழாவில் பத்தாயிரம் முட்டைகளால் மெகா சைசில் ஆம்லெட் தயாரித்து, பெல்ஜியம் மக்கள் வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பிரசெல்ஸ்: பெல்ஜியம் ஆண்டு விழாவில், பத்தாயிரம் முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டது சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து, மகிழ்ச்சியாக வசந்த காலத்தை கொண்டாடுவார்கள்.

Belgium People make scrambles annual giant omelette

இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் மற்றும் மக்களில் சிலர் இணைந்து அதற்கு உதவி புரிந்தனர். அவர்கள் மிகப் பெரிய பாத்திரத்தில் 10, 000 முட்டையை உடைத்து ஊற்றினர்.

அதில் வெங்காயம் மற்றும் இறைச்சியைக் கலந்து ஆம்லெட் செய்தனர். அந்த ராட்சத ஆம்லெட்டை விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். மெகா ஆம்லெட்டை அனைவரும் சேர்ந்து செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+