10வது திருமண நாளை கொண்டாடிய கையோடு விவாகரத்து கோரியுள்ள ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக்கும், அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிபர் கார்னரும் 10வது திருமண நாளை கொண்டாடிய கையோடு விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக்கிற்கும் திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் போன்று. அவர் வாழ்வில் காதலிகள், மனைவி தங்குவதே இல்லை. அவர் அயர்ன் மேன் நடிகை க்வெய்னத் பால்ட்ரோவை காதலித்தார்.
1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் பென்னும், பால்ட்ரோவும் சந்தித்து நண்பர்களாகினர். பின்னர் நட்பு காதல் ஆனது.

க்வெய்னத் பால்ட்ரோ
பென் அப்லெக்கும், க்வெய்னத் பால்ட்ரோவும் 1997ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை காதலர்களாக வலம் வந்தனர். அதன் பிறகு ஒத்துவரவில்லை என்று கூறி பிரிந்துவிட்டனர்.

ஜெனிபர் லோபஸ்
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸும், பென் அப்லெக்கும் காதலித்தனர். அவர்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று திருமணத்தை நிச்சயித்தனர். ஆனால் நிச்சயதார்தத்தோடு அவர்களின் உறவு முறிந்துவிட்டது.

ஜெனிபர் கார்னர்
ஜெனிபர் லோபஸை பிரிந்த பென் நடிகை ஜெனிபர் கார்னரை காதலித்து அவரை கடந்த 2005ம் ஆண்டு ஜுன் மாதம் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த 29ம் தேதி 10வது திருமண நாளை கொண்டாடிய கையோடு விவாகரத்து கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பேட்மேன்
2016ம் ஆண்டு எடுக்கப்பட உள்ள பேட்மேன் v சூப்பர்மேன்: டான் ஆப் ஜஸ்டிஸ் படத்தில் பென் அப்லெக் பேட்மேனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications