அதிர்ச்சியில் ஹிலரி.... இன்னொரு ஒபாமா ஆவாரா பெர்னி சான்டர்ஸ்?
மில்வாக்கி(யு.எஸ்): விஸ்கான்ஸின் ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் (பிரைமரி - வாக்கு சீட்டு தேர்தல் முறை) வெற்றி பெற்று ஹிலரிக்கு பெரும் சவாலாக பெர்னி சான்டர்ஸ் உருவெடுத்துள்ளார்.
முன்னதாக தேர்தல் நடைபெற்ற வாஷிங்டன், அலாஸ்கா, ஹவாய் மாநிலங்களில் பெர்னி சான்டர்ஸ் கூடுதல் வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெற்றார்.
இந்த மூன்று மாநிலங்களிலும் காக்கஸ்(Caucus) என்று சொல்லப்படும் கட்சியினர் டெலிகேட்ஸ் (delegates) தேர்ந்தெடுக்கும் முறையாகும்.(கிட்ட்தட்ட நம்மூரில் உட்கட்சி தேர்தலில் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது போல், அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது).
பெர்னியின் வெற்றி இங்கெல்லாம் நிச்சயமான ஒன்று என்றாலும், வாக்கு வித்தியாசம் ஹிலரி அணிக்கு கலக்கம் தரக்கூடியது.

அடுத்ததாக ஏபரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நியூயார்க் மாநிலத்தில் ஹிலரியின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். அடுத்தடுத்த வடகிழக்கு மாநிலங்களிலும் ஹிலரிக்கு பெரும் ஆதரவு உள்ளது.
ஒரு வேளை இந்த மாநிலங்களிலும் பெர்னி வெற்றி பெற்றுவிட்டால், ஹிலரிக்கு பெர்னி பெரும் சவாலாகி விடுவார்.
ஹிலரிக்கு ஆதரவாக சூப்பர் டெலிகேட்ஸ்
ஜனநாயகக் கட்சி உட்கட்சி தேர்தலில் மாநிலங்கள் வாரியாக முதலில் டெலிகேட்ஸ் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டெலிகேட்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலத்தில் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளர்கள், தங்களுக்கு வாக்களிக்க டெலிகேட்ஸ்களை நியமனம் செய்வார்கள்.
இது தவிர Super Delegates என்றழைக்கப்படும், கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் மற்றும் செனட் அவை உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்ட 718 பேர்களுக்கும் உட்கட்சி அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. தேசிய மாநாட்டில் அதிபர் வேட்பாளருக்கான தேர்வு நடைபெறும் போது இந்த சூப்பர்டெலிகேட்ஸ் யாருக்கும் வாக்களிக்கலாம்.

மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் டெலிகேட்ஸ் அந்த மாநிலத்தில் வெற்றி பெற்ற அதிபர் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்.
நிலை (தடு)மாறுமா ?
தற்போதைய நிலவரப்படி, ஹிலரிக்கு 483, பெர்னிக்கு 31 சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு இருக்கிறது. கடந்த முறை போட்டியிடும் போதும் ஹிலரிக்கு முதலில் இதே அளவு ஆதரவு இருந்தது. ஹிலரியை விட ஒபாமா அதிக மாநிலங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சூப்பர்டெலிகேட்ஸ் ஆதரவு நிலை மாறியது.
அடுத்தடுத்த மாநிலங்களில் பெர்னி சான்டர்ஸ் வெற்றிபெற்றால் சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவும் அவர் பக்கம் திரும்பக்கூடும். அந்த வகையில் பெர்னி அதிபர் வேட்பாளர் ஆவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஆனால், இது வரையிலும் கறுப்பின மற்றும் ஹிஸ்பானிக் உள்ளிட்ட பலதரப்பு மக்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில், மிஷிகனில் மட்டுமே பெர்னி வெற்றி பெற்றுள்ளார்.
என்ன சொல்கிறது எண்ணிக்கை?
இதுவரையிலும் சூப்பர் டெலிகேட்ஸ்- ஐ சேர்த்து ஹிலரி வசம் 1773 வாக்குகள் உள்ளன. பெர்னி 31 சூப்பர் டெலிகேட்ஸுடன் 1094 ஐ எட்டியுள்ளார்.
74 வயது பெர்னி சான்டர்ஸ்க்கு அமெரிக்கா முழுவதிலும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேராதரவு இருந்தாலும், தற்போதைய வாக்குகள் எண்ணிக்கைப் படி அதிபர் வேட்பாளர் ஆவது இன்னும் கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
அதேவேளையில் அமெரிக்க அரசியலும் அதிரடித் திருப்பங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்தது தான். ஹிலரிக்கு அதிர்ச்சி கொடுத்து, பெர்னி சான்டர்ஸ் இன்னொரு ஒபாமாவாக உருவெடுத்தால் ஆச்சரியமில்லை!
-இர தினகர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications