மோடி 'மனைவிக்காக' கார் கதவை திறந்து பல்பு வாங்கிய வெள்ளை மாளிகை பாதுகாவலர்.. வைரலாகும் வீடியோ
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் முறையாக அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
மோடிக்கு அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் சிவப்பு கம்பளத்துடன், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ட்ரம்ப் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்து மோடியை வரவேற்றார்.
இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மோடியின் கார் வெள்ளை மாளிகை அருகே வந்தபோது, அமெரிக்க பாதுகாவலர்கள் வந்து நின்று சல்யூட் செய்கிறார்கள்.

இரு கதவுகள்
மோடியின் பிரமாண்ட கார் வந்து நின்றதும், காரின் பின் இருக்கையின் இரு கதவுகளின் அருகிலும் ஆளுக்கொரு பாதுகாவலர்கள் வந்து நின்றனர். ஒரு பாதுகாவலர் வலதுபக்க கதவை திறந்தார். மற்றொரு பாதுகாவலரோ இடதுபக்க கதவை திறந்தார். அதை திறக்க கஷ்டமாக இருந்தது. இருப்பினும், சற்று சிரமப்பட்டு அந்த கதவை அவர் திறந்தார்.

மோடி வெளியேறினார்
அதற்குள்ளாக மோடி வலது பக்க கதவு வழியாக வெளியேறி, அங்கே நின்ற ட்ரம்ப்பிடம் கை குலுக்கி பேச ஆரம்பித்தார். இடதுபக்க கதவை திறந்த பாதுகாவலரோ, உள்ளே யாரும் இல்லை என்பதை பார்த்து சற்று திடுக்கிட்டார்.

வழக்கம்
சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வருகையின்போது, அவர்கள் வலதுபக்கமும், அவர்களின் மனைவி இடதுபக்கமும் அமர்ந்திருப்பர். எனவே இரு கதவுகளையும் இரு பாதுகாவலர்கள் திறப்பார்கள்.
|
பல்பு
அமெரிக்க பாதுகாவலர்களும், மோடியின் மனைவிக்காகத்தான் இடதுபக்க கதவை திறந்தார். ஆனால் மோடி தனது மனைவியுடன் வசிக்கவில்லை என்பதை பாதுகாவலர் அறிந்திருக்கவில்லை போலும். அமெரிக்க பாதுகாவலர் பல்பு வாங்கிய இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications