20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்
ரிட்ஜெர்சட்: 20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரிட்ஜெர்செட் என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது.

நிலநடுக்கத்துக்குப் பின்னர் 1,700 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வானது சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதி அருகே மையமாக கொண்டு ஏற்பட்டது.
திரைப்படங்களில் பார்ப்பதைப் போல ஒரு பயங்கரமான நிலநடுக்கமாக உணர்ந்தோம் என்கின்றனர் ரிட்ஜெர்செட்வாசிகள். ஒவ்வொரு முறை நில அதிர்வு ஏற்படும் போதும் ஒட்டுமொத்தமாக கட்டிடங்கள் குலுங்கிக் கொண்டே இருந்தன என்றும் பீதியுடன் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பல இடங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீ பிடித்துள்ளன. பல இடங்களில் சாலைகள் பிளவுபட்டுள்ளன. லாஸ் வேகாஸ் முதல் ஆரஞ்ச் கவுண்ட்டி வரையும் கலிபோர்னிய நகரம் முழுவதுமே பெரும் சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications