பில்கேட்ஸ், வாரென் பபெட், லேரி எலிசன், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், ஆசிம் பிரேம்ஜி.. அதே தான்!
நியூயார்க்: அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் இதழ் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த ஆண்டு 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில்கேட்ஸ் முதலிடம் பெற்றுள்ளார்.

பில்கேட்ஸ்
கடந்த ஆண்டு பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 66 பில்லியன் டாலர். இந்த ஆண்டு 6 பில்லியன் டாலர் அளவு சொத்து அதிகரித்துள்ளது.

வாரென் பபெட்
பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் வாரென் பபெட் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன்
41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான ஆரக்கிள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லேரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் இதழில்
பிரபல பொருளாதார செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க், தற்போது உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுட்டது அதிலும் பில்கேட்ஸ்தான் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி
இந்த பட்டியலில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 25-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு 1,32,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

லட்சுமி மிட்டல்
இங்கிலந்தில் வசிக்கும் இந்தியரான லட்சுமி மிட்டல் 83,600 கோடி ரூபாய் சொத்துடன் பட்டியலில் 54-வது இடம் வகிக்கிறார்.

ஆசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜிக்கு 93-வது இடம் கிடைத்திருக்கிறது. அவரது சொத்து மதிப்பு 62,700 கோடி என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications