சீனா: வீடியோ மூலம் பாலியல்கல்வி... குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படம் வெளியீடு
பெய்ஜிங்: சமீபகாலமாக அதிகளவில் சீனாவில் சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாவதால், அதனை களையும் வகையில் அவர்ளுக்கான பாலியல் விழிப்புணர்வுப் படமொன்று வெளியிடப் பட்டுள்ளது.
சீனச் சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் நல்லெண்ணத்தில் இந்த விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தலா ஒரு நிமிடம் ஓடும் இந்த 3 வீடியோ காட்சிகளுக்கு அந்நாட்டு மக்களிடையே பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் குற்றங்கள்....
சீனாவில் சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியாக சீரழிக்கப் படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பாலியல் ரீதியாக போதுமான விழிப்புணர்வு அக்குழந்தைகளுக்கு இல்லாததே இத்தகையக் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிய வந்தது.
மூன்று வீடியோக்கள்...
அதனைத் தொடர்ந்து, தனியார் நிறுவனம் ஒன்று கைகளால் வரையப் பட்டு அனிமேஷன் செய்யப்பட்ட தலா ஒவ்வொன்றும் நிமிடம் ஓடும் மூன்று அனிமேஷன் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
வித்தியாசமான தலைப்புகளில்...
குழந்தை எங்கிருந்து வருகிறது? ('where babies come from'), ஏன் சிறுவர்கள் சிறுமியரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள்? ('why boys are different from girls' ) மற்றும் எவ்வாறு சிறுவர்,சிறுமியர் பாலியல் கொடுமையை தவிர்க்கலாம்? ( 'how minors can prevent molestation') போன்ற தலைப்புகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோக்களில் சிறுவர்- சிறுமியருக்கு பாலியல் கல்வியை கற்றுத் தரும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
பாலியல் கல்வி அவசியம்....
இந்த வீடியோவை வடிவமைத்த தனியார் நிறுவனம், இன்றைய வாழ்க்கைச் சூழலில் சிறுவர்,சிறுமியர்களுக்கு இந்த வீடியோ காட்சிகள் மிக அவசியமானவை, பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள்...
இதுவரை இந்த வீடியோக்களை 10,00,000 திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications