என்னங்க இது உடம்பு முழுக்க? மேகம் மாதிரி.. ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த விசித்திர விலங்கு- பின்னணி
கோஹிமா: நாகாலாந்தில் காடு ஒன்றில் கண்டறியப்பட்ட விசித்திர விலங்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வனவிலங்குகளை ஆராய உலகம் முழுக்க பல அடர்ந்த காடுகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம். வனவிலங்குகளின் எண்ணிக்கைகளை கணக்கிடவும், யானைகள், புலிகளின் நடமாட்டத்தை கணக்கிடவும் கூட இதுபோல கேமராக்கள் காடுகளில் பொருத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட அடர்ந்த காட்டு பகுதிகளில் பல இடங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலம் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்களில் அவ்வப்போது சில விசித்திரமான விலங்குகள் சிக்குவதும் வழக்கமாகி வருகிறது.

ஆச்சர்யம்
அப்படிதான் நாகாலாந்தில் கண்டறியப்பட்ட விசித்திர சிறுத்தை ஒன்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோ - மியான்மர் பார்டரில் இந்த விசித்திர சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3700 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலையில் காட்டுப்பகுதியில் மரம் ஒன்றுக்கு அருகே இந்த சிறுத்தை தனியாக நின்று உள்ளது. இதை அங்கு விலங்குகளை ஆராய வைத்திருந்த கேமரா படம் பிடித்துள்ளது.

நாகாலாந்து சிறுத்தை
சிறுத்தைகளை கேமரா படம் பிடிப்பதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. இந்த விஷயம் வைரலானதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது. இதுவரை இப்படி ஒரு சிறுத்தையை பார்த்தது இல்லை என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் இதன் உடலில் இருக்கும் மேகம் போன்ற வித்தியாசமான புள்ளிகள். இந்திய சிறுத்தைகளில் இப்படி புள்ளிகளை பார்க்கவே முடியாது.

சிறுத்தை புள்ளிகள்
இதன் உடலில் மிக மிக வித்தியாசமான புள்ளிகள் இருந்திருக்கின்றன. இப்படி ஒரு சிறுத்தையை இதற்கு முன் இந்தியாவில் நாங்கள் பார்த்ததே இல்லை.. இதுதான் வரலாற்றில் முதல்முறை.. என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். IUCN/Species Survival Commission (SSC) Cat Specialist Group என்ற குழு மூலம் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சம் 4-5 சிறுத்தைகள் மட்டுமே இப்படி இருக்கிறது.

மேகம் சிறுத்தை
அந்த 4 -5 சிறுத்தைகளும் கூட ஒரே குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுத்தை Neofelis nebulosa வகையை சேர்ந்தது என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் உயரம் குறைந்தது ஆகும். மரம் ஏறக்கூடிய திறன் கொண்டது இது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மிக மிக குறைவான எண்ணிக்கையில்தான் இந்த சிறுத்தைகள் உலகம் முழுக்க உள்ளன.

ஆக்ரோஷமான சிறுத்தை
இது மிகவும் ஆக்ரோஷமானது. அதிக வேகம் கொண்டது. சிறுத்தை வகைகளிலேயே இதுதான் சிறந்தது. மிக வேகமாக மரம் மற்றும் செங்குத்தான மலையில் ஏறும் திறன் கொண்டவை இந்த சிறுத்தைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வகை சிறுத்தைகள் இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தோம் முதல் முறை இதை கண்டுபிடித்துள்ளோம் என்று அந்த சிறுத்தையை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications