மகளின் மானத்தை விற்று கிடைத்த பணத்தில் கேட்டி பிரைஸ் போன்று ஆன தாய்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த தாயும், மகளும் பார்க்க முன்னாள் மாடல் கேட்டி பிரைஸ் போன்று இருக்க ரூ. 57 லட்சம் செலவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ரக்பி பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜினா கிளார்க்(38). அவரது மகள் கைலா மோரிஸ்(20). கைலாவுக்கும், ஜார்ஜினாவுக்கும் தாங்கள் பார்க்க முன்னாள் மாடல் கேட்டி பிரைஸ் போன்று இருக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கேட்டி பிரைஸ் போன்று ஆக முடிவு செய்தனர்.

Bizarre! Mother-daughter duo spends 56,000 pounds to look like Katie Price

17 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திய கைலா அதில் இருந்து ஆடையை அவிழ்த்துவிட்டு நடனம் ஆடும் கிளப்பில் வேலைக்கு சேர்ந்து சம்பாதித்தார். மேலும் 50 வயதான திருமணமான ஆணின் இச்சையை தீர்த்து பணம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கைலாவுக்கும் தனது கணவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த பெண் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து வேறு ஒரு திருமணமான வயதான நபரை தேடி வந்தார் கைலா. இதற்கிடையே இப்படி மானத்தை விற்று கிடைத்த பணத்தில் ரூ.57 லட்சம் செலவு செய்து கைலாவும் அவரது தாயும் மார்பகம், உதடு, பின்னழகு உள்ளிட்டவற்றை சிகிச்சை மூலம் பெரிதாக ஆக்கினர்.

இது குறித்து கைலா கூறுகையில்,

நான் பள்ளியில் படிக்கையிலேயே மார்பகத்தை பெரிதாக ஆக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு என் தாயும் சம்மதம் தெரிவித்தார். என் தாய் தான் என்னுடைய சிறந்த தோழி. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாங்கள் மேலும் நெருக்கமாகிவிட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+