ஆப்பிரிக்காவிலும் பறக்கப் போகும் மோடி கொடி.. கிளை திறக்கும் பாஜக!
நைரோபி: ஆப்பிரிக்க கண்டத்திலும் பாஜக தனது கிளையைத் திறக்கிறது. முதலில் கென்யாவிலும் பின்னர் படிப்படியாக ஆப்பிரிக்காவின் பிற நாடுகளிலும் பாஜக தனது கிளையைத் திறக்கவுள்ளது.
அடுத்த 15 நாட்களில் கென்யத் தலைநகர் நைரோபியில் தனது கட்சிக் கிளையைத் திறக்கவுள்ளதாம் பாஜக.
அடுத்து படிப்படியாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் தனது கிளைகளை பாஜக தொடங்கவுள்ளதாம்.

போன வாரம் கனடாவில்
கடந்த வாரம்தான் கனடா, டென்மார்க், உகாண்டா ஆகிய நாடுகளில் தனது கிளைகளைத் தொடங்கியது பாஜக.

அடுத்து எத்தியோப்பியா, ருவாண்டா
அடுத்து கென்யாவில் திறக்கிறது. இதைத் தொடர்ந்து எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜிம்பாப்வே, ஜாம்பியா ஆகிய நாடுகளிலும் கிளைகளைத் திறக்கவுள்ளது.

ஓவர்சீஸ் பாஜக சார்பில்
இந்த பணிகளை வெளிநாட்டு பாஜக நண்பர்கள் அமைப்பு செய்து வருகிறது. இதுகுறித்து அமைப்பின் கென்ய நாட்டுத் தலைவரான விமல் சத்தா கூறுகையில், எங்களுக்கு அங்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. எனவேதான் ஆப்பிரிக்க நாடுகளிலும் கிளைகளைத் திறக்கிறோம். கென்யாவில் உள்ள ஒவ்வொரு முக்கிய நகரிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் பாஜகவின் கென்ய கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

இந்தியாவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் திறக்கப்படும் பாஜக கிளைகள், இந்தியாவுடன் இந்த ஆப்பிரிக்க நாடுகளை இணைத்து செயல்பட வைக்க உதவும்.

இந்தியர்களுக்கு உதவும்
மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கவும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இவை இந்திய அரசுடன் இணைந்து செயல்பட உதவும்.

ஆப்பிரிக்க வளர்ச்சியில் இந்தியா முக்கியம்
ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. எனவேதான் இங்கு பாஜகவின் கிளைகளைத் திறக்கிறோம் என்றார் சத்தா.

இந்தியாவில் முதலீடுகள் குவியும்
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் சிறந்த முதலீடுகளை ஆப்பிரிக்கர்கள் மேற்கொள்ளவும் இவை வகை செய்யும். இதற்கான நல்ல வாய்ப்புகளை எங்களது ஆப்பிரிக்க பாஜக கிளைகளும், பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பும் இணைந்து ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

32 நாடுகளில் பாஜக நண்பர்கள் அமைப்பு
தற்போது ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பாஜகவின் நண்பர்கள் அமைப்புக்கு 32 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications