சூரியனைப் போன்று 1,200 கோடி பெரிய கருந்துளை... சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
பெய்ஜிங்: சூரியனை விட சுமார் 1200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர் களை வெளியிடும் தன்மை கொண் டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' என்று அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கி உதவியுடன் இப்படிப்பட்ட ஒரு கருந்துளை ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

சூரியனை விடப் பெரியது...
இந்தக் கருந்துளைக்கு SDSS J0100+2802 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து சுமார் 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது அளவில் சூரியனை விட 1200 கோடி பெரியது என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அதீத வெளிச்சம்...
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி நாடும் உறுதி செய்துள்ளன.

அடுத்த கட்ட ஆய்வு....
இந்தக் கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களில் ஒருவரான சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூசுபிங் கூறுகையில், ‘பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதன் மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது" என்றார்.

பாராட்டு...
இதுகுறித்து சீன அறிவியல் அகாடெமியைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர் சென் ஜியான்ஷெங் கூறும்போது, "பொதுவாக, இதுபோன்ற ஒரு கருந்துளையைக் கண்டுபிடிக்க 10 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கிகள்தான் பயன் படுத்தப்படும். ஆனால் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கியைப் பயன்படுத்தி இவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை தான். இது சீன விண்வெளி விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் காட்டுகிறது" என்ப் பாராட்டியுள்ளார்.
-
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?












Click it and Unblock the Notifications