முர்டோச் வீட்டில் இல்லாத சமயத்தில் ரகசியமாக வந்து அவரது மனைவியைச் சந்தித்த டோனி பிளேர்!
லண்டன்: மீடியா ஜாம்பவான் ருபர்ட் முர்டோச் தனது சீன வம்சாவளி மனைவி வென்டி டெங்கை, ஏன் முர்டோச் விவாகரத்து செய்தார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கும், டெங்குக்கும் இடையே இருந்த கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
முர்டோச் இல்லாத நேரத்தில் அவரது கலிபோர்னியா வீட்டுக்கு வந்த பிளேர், டெங்குடன் அன்றைய இரவை செலவிட்டது குறித்துத் தெரிய வந்ததால்தான் அதிர்ச்சி அடைந்து டெங்கை விவாகரத்து செய்துள்ளார் முர்டோச்.
2012ம் ஆண்டு இந்த விவாகரத்து நடந்தது. அப்போது அதற்கான காரணம் சரிவரத் தெரியாமல் இருந்தது. தற்போது இதுதொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

2007ல் ஓய்வு பெற்ற பிளேர்
இங்கிலாந்து பிரதமராக இருந்து வந்த டோனி பிளேர் 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகும் கூட அவர் தொடர்ந்து பிசியாகவே இருந்து வருகிறார்.

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம்
ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிக்கடி அவர் டூர் போய் வந்தார். கூடவே அமெரிக்காவுக்கும் அடிக்கடி வந்தார். சீனாவுக்கும் அடிக்கடி போனார்.

முர்டோச்சுடன் நட்பு
முர்டோச்சுடனான நட்பை இந்த சமயத்தில் மேலும் இறுக்கமாக்கினார் பிளேர். 2011ம் ஆண்டு இருவரும் அமெரிக்காவில் வைத்து முதல் முறையாக சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் இருவரது நட்பும் இறுக்கமானது.. இதற்குக் காரணம் முர்டோச்சின் அப்போதைய மனைவி டெங்.

சீனத்து மனைவி
டெங்கு சீன வம்சவாளியைச் சேர்ந்தவர். முர்டோச்சைப் பார்க்க பிளேர் வந்த சமயத்தில் அவருடன் டெங்கு நட்பாகப் பழக ஆரம்பித்தார். இது பின்னர் நெருக்கமான நட்பாக மாறியுள்ளது.

சந்திப்புகள்
அதன் பின்னர் டெங்கை சந்திக்க நிறைய நேரம் ஒதுக்க ஆரம்பித்தார் பிளேர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். சீனாவுக்கு அடிக்கடி பயணிக்க ஆரம்பித்தார் பிளேர். அப்போது டெங்கும் அவருடன் போய் வந்துள்ளார்.

லண்டன் வீட்டில்
2012ம் ஆண்டு லண்டனில் உள்ள முர்டோச்சுக்குச் சொந்தமான வீட்டில் வைத்து 2 முறை சந்தித்தார் பிளேர். இது அவர்களிடையேயான நெருக்கத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.

கலிபோர்னியா வீட்டில் விருந்து
அதன் பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவிலான முர்டோச்சின் வீட்டில் ஒரு முழு இரவை டெங்குடன் கழித்துள்ளார் பிளேர். இந்த சந்திப்பை அவர்கள் இருவருமே முர்டோச்சுக்குத் தெரியாமல் மறைத்துள்ளனர்.

தோழியுடன் இருப்பதாக பொய்
பிளேர் வருவது குறித்து தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை டெங். மாறாக, தனது தோழியுடன் தங்கியிருப்பதாக கூறியுள்ளார். உண்மையில் தோழியுடன்தான் இருந்தார் டெங். ஆனால் முர்டோச் வருவதற்கு முன்பாக அந்தத் தோழியை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டார்.

ஊழியர்களை அனுப்பினார்
மேலும் பிளேர் வந்ததும், தனது பண்ணை வீட்டு ஊழியர்களை வெளியேற்றியுள்ளார் டெங். மேலும் பிளேரின் பாதுகாவலர்களை அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்து விட்டார் பிளேர்.

இரவு முழுவதும்
அன்று பகலிலும் இரவிலும் அங்குதான் இருவரும் தங்கியிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து பின்னர் பிளேருக்கு டெங் அனுப்பிய ஒரு மெயிலில், உங்களை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். உங்களுக்கு அழகான உடல் என்று கூறியுள்ளார்.

2013ல் விவாகரத்து செய்த முர்டோச்
முர்டோச்சுக்கு இந்த சந்திப்பு குறித்து முதலில் தெரியவில்லை. என்ன கொடுமை என்றால் இந்த தங்கலுக்குப் பிறகு அடுத்த நாள் முர்டோச்சைச் சந்தித்தார் பிளேர். அப்போது தனது அறக்கட்டளைக்கு நிதி கேட்டு அவரிடம் விண்ணப்பித்தார். அப்போதும் கூட கலிபோர்னியா வீட்டில் டெங்குடன் தங்கியதாக அவர் காட்டிக் கொள்ளவில்லையாம். 2013ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் முர்டோச்.

மகன் மூலம் அம்பலமான டெங்
டெங்கின் செயல்பாடுகள் குறி்த்தும், அவர் பிளேருக்கு அனுப்பிய மெயில் குறித்தும் முர்டோச்சின் மகன்தான் தனது தந்தையிடம் காட்டியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போய்தான் டெங்குடனான 14 வருட தாம்பத்தியத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்தாராம் முர்டோச்.

மேலும் பல கள்ளக்காதல்கள்
அதேசமயம், டெங்குக்கு டோனி பிளேர் மட்டுமல்லாமல் மேலும் சிலருடனும் கள்ளக் காதல் இருந்ததாம். கார்மல் நகரைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் பயிற்சியாளர், கூகுள் நிறுவனர் எரிக் ஸ்மித் ஆகியோருடனும் அவர் ரகசிய உறவைப் பேணி வந்தாராம்.

காதல் ரசம் சொட்டச் சொட்ட!
டோனி பிளேர் குறித்து அவரது பிஏவுக்கும் சிலாகித்து மெயில் போட்டுள்ளார் டெங். அதில் பிளேருக்கு அழகிய உடலமைப்பு. அழகிய கால்கள்... ஸ்லிம்மாக இருக்கிறார்.. . ஊடுறுவும் கண்கள். அவரது கண்களை அவ்வளவு நேசிக்கிறேன். அவரது பவர்..... எல்லாமே எல்லாமே என்று போகிறது அந்த மெயில்.

3 ஊர்களில்
பெய்ஜிங், நியூயார்ஸ், லண்டன் ஆகிய நகரங்களில் வைத்து டெங்கை அடிக்கடி சந்தித்துள்ளாராம் பிளேர்.அதேபோல லாஸ் ஏஞ்செலஸிலும் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications