அபுதாபியில் ரத்த தான முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!
அபுதாபியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அரேபியா டாக்சி நிறுவனத்தில் ரத்த தான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அபுதாபி அரேபியா டாக்சி நிறுவனத்தில் ரத்ததான முகாம் கடந்த 20ஆம் தேதி திங்கட்கிழமை நடந்தது. இந்த ரத்ததான முகாம் அபுதாபி ரத்ததான வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த முகாமில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் சிறப்புடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேலாளர் அஸ்பக், இஸ்மாயில், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications