சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும்: ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை
பாக்தாத்: சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி எச்சரித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீனாவில் உள்ள ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சீனர்களை எதிர்த்து போராடுவோம் என உய்குர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். சீனாவில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்களில் பலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
நாட்டில் இருக்கும் உய்குர் முஸ்லீம்களை நினைத்து சீன அரசு கவலையில் உள்ளது. சீனாவின் மேற்கு பகுதியான ஜிங்ஜியங்கில் உய்குர் முஸ்லீம்கள் தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் அரசுக்கும் இடையே பல காலமாக போராட்டமாக உள்ளது.
பாக்தாதி வெளியிட்டுள்ள வீடியோவில் ஈராக்கில் உய்குர் முஸ்லீம்கள் பயிற்சி பெறும் காட்சிகள் உள்ளன. ஹான் சீனர்களுடனான மோதலில் கொல்லப்பட்ட உய்குர் முஸ்லீம்களுக்கு பழிவாங்குவது போன்று இந்த பயிற்சி உள்ளது.
மேலும் அந்த வீடியோவில் சீன கொடியை எரிக்கும் காட்சியும் உள்ளது.


Click it and Unblock the Notifications
