வாங்க, பலூன்ல ஏறுங்க.. ஸ்டிராட்டோஸ்பியருக்கு ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்....!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிக் கொண்டு போறோம் என்று ஒரு குரூப் ஏற்கனவே ஆட்களை சேர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பூமிக்கு மேல் உள்ள ஸ்டிராட்டோஸ்பியருக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை அதே நிறுவனம் அறிவித்துள்ளது.
வேர்ல்ட் வியூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விண்வெளி சுற்றுலா தொடர்பா விவரங்களையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹாட் ஏர் பலூன் மூலம் இந்த ஸ்டிராட்டோஸ்பியர் சுற்றுலாவை அது நடத்தப் போகிறதாம்.

அது என்ன ஸ்டிராட்டோஸ்பியர்?
முதலில் ஸ்டிராட்டோஸ்பியர் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் (தெரிஞ்சவங்க அடுத்தத்த ஸ்லைடுகளுக்குப் போய் விடலாம்). அதாவது பூமிக்கு மேலே பல அடுக்குகள் உள்ளன. அதில் முதலாவது வருவது டிரோபோஸ்பியர் (troposphere). விமான பயணம் செய்தவர்களுக்கு இது தெரியும்.. அதாவது பூமிக்கு மேலே உள்ள பகுதிதான் இது.

2வது அடுக்குதான் ஸ்டிராட்டோஸ்பியர்
இந்த டிரோபோஸ்பியருக்கு அடுத்து வருவதுதான் ஸ்டிராட்டோஸ்பியர். இதற்கு அடுத்து உள்ளது மீசோஸ்பியர். இதைத் தொடர்ந்து உள்ளது தெர்மோஸ்பியர். அவ்வளவுதான் கடைசியில் எக்ஸோஸ்பியர்.

பலூன் மூலம் சுற்றுலா
இதில் 2வதாக உள்ள ஸ்டிராட்டோஸ்பியருக்குத்தான் சுற்றுலா கூட்டிச் செல்லப் போவதாக அறிவித்திருக்கிறது இந்த நிறுவனம்.

மது அருந்தியபடி வேடிக்கை பார்க்கலாம்
இந்த சுற்றுலாவின்போது சுற்றுலா வருவோர் ஜாலியாக மது அருந்தியபடியே நமது பூமியின் கீழ் அழகையும், விண் வெளியின் மேல் அழகையும் பார்த்து பிரமிக்கலாமாம். நீல நிறத்திலான பூமியின் அழகு ஸ்டிராட்டோஸ்பியரிலிருந்து பார்க்கும்போது மனதைக் கவ்வும் என்பதால் இந்த சுற்றுலா பிக்கப் ஆகும் என்று இந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2015ல் தொடங்கும்
2015ம் ஆண்டு இந்த சுற்றுலாவைத் தொடங்கவுள்ளனராம். இந்த பயணத்திற்கான கட்டணம் ஒரு நபருக்கு 75 ஆயிரம் டாலராகும்.

ராக்கெட் இல்லை.. பலூன்தான்
இந்த பயணத்திற்காக ராக்கெட்டெல்லாம் தேவைப்படாதாம். பெரிய சைஸ் பலூனில் கூட்டிச் செல்லப் போகிறார்களாம்.

அதே குரூப்தான்...
ஏற்கனவே செவ்வாய் பயணத்திற்கான திட்டத்தை அறிவித்துள்ள நிறுவனம்தான் இந்த திட்டத்தையும் அறிவித்துள்ளது.

பாயிண்டர் சொல்வதிலும் பாயிண்ட் இருக்குல்ல...!
இதுகுறித்து வேர்ல்ட் வியூ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜேன் பாயிண்டர் கூறுகையில், இது மிகவும் சிறப்பான சுற்றுலாவாக அமையும. மணிக்கணக்கில் வான்வெளியில் மிதந்த அனுபவ்ம் மக்களுக்குக் கிடைக்கும். இந்த பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பலூனானானது, ஒரு ஜெட்விமானத்தின் அளவுக்கு பெரிதாக இருக்கும். மிகவும் சொகுசான வசதிகளுடன் கூடியதாக இருக்கும்.

நடந்து கொண்டே வேடிக்கை பார்க்கலாம்
இந்த கேபினுக்குள் உட்கார்ந்தபடியும் வேடிக்கை பார்க்கலாம். நடந்தபடியும் பார்க்கலாம். மதுஅருந்தலாம். அங்கேயே பார் வசதியும் செய்யவுள்ளோம். மிகவும் சவுகரியமாக இந்தப் பயணத்தை அனுபவிக்கலாம் என்றார்.

ஒரு நேரத்தில் 6 பயணிகள்
இந்த பெரிய சைஸ் பலூன் பயணத்தில் ஒரு சமயத்தில் 6 பேர் வரை பயணிக்கலாம். 2 பேர் பலூனை செலுத்தும் ஊழியர்களாக இருப்பார்களாம். ஸ்டிராட்டோஸ்பியருக்குப் போய்ச் சேர மொத்தமாக மூன்றரை மணி நேரம் ஆகுமாம். பின்னர் திரும்பி வரும்போது விமானம் போலவே அந்த பலூன் கீழே தரையிறங்குமாம்.

பூமியிலிருந்து 62 மைல் உயரத்தில்
ஸ்டிராட்டோஸ்பியரானது, பூமியிலிருந்து 62 மைல் உயரத்தில் இருக்கிறது.

மேலயிருந்து குதிச்சு தற்கொலை பண்ணிட்டா...??
இந்தக் கேள்விக்கும் பாயிண்டர் பக்காவான பதில் வைத்துள்ளார்.. பலூனின் கதவுகளை யாருமே திறக்க முடியாது. எனவே யாரும் மேலேயிருந்து கீழே குதிக்க முடியாது.. வாய்ப்பும் இல்லை என்கிறார் பாயிண்டர்.

எங்கேயிருந்து...?
ஆனால் இந்தப் பயணம் எந்த இடத்திலிருந்து தொடங்கும் என்ற விவரத்தை வேர்ல்ட் வியூ நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாம்.
தொடங்கியதும் ஒருவாட்டியாவது போய்ட்டு வந்துரனும்...
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications