பிரான்ஸில் பயங்கரம்: ப்ரீசரில் 5 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள்
பாரீஸ்: பிரான்ஸில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட 5 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள போர்டாக்ஸ் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் வியாழக்கிழமை வீட்டில் உள்ள குளிர்பானங்கள் வைக்கு குட்டி ப்ரீசரை திறந்துள்ளார். அதில் ஒரு பையில் பிறந்த குழந்தையின் உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டை சோதனையிட்டபோது அங்கு பெரிய ப்ரீசரில் மேலும் 4 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சோதனை நடந்தபோது வீட்டில் புகார் அளித்த அந்த 40 வயது நபர், அவரின் 35 வயது மனைவி, 13 மற்றும் 15 வயது மகள்கள் ஆகியோர் இருந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் அந்த 35 வயது பெண்ணை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தை ஒன்றை பெற்று அதன் உடலை ப்ரீசரில் வைத்துள்ளார்.
தனது மனைவியின் 5 கர்ப்பங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கணவர் பரிதாபமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு வடக்கு பிரான்சில் உள்ள வீட்டு தோட்டத்தில் 8 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்ககது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications