காரில் வெடிகுண்டுகளை நிரப்பி தீவிரவாதிகள் தாக்குதல்.. ஈராக்கில் 35 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சதுக்கத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈராக்கில் ஊடுருவியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்தே பெரும்பாலும் அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை பாக்தாத்தின் சதர் நகரில் உள்ள சதுக்கத்தில் ஏராளமான ஷியா பிரிவு கூலித்தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த தீவிரவாதிகள் கூட்டத்தில் வேகமாக மோதி வெடிக்கச்செய்தனர்.
இதில் 35க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த சனிக்கிழமை இங்குள்ள மார்க்கெட் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
ஷியா ஹோலி சிட்டியில் நடந்த மற்றொர தாக்குதலில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் ஷியா பிரிவினரையே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications