உலகிலேயே மிகப் பெரிய பணக்கார "பாப்"பையா இவர்தானாமே!
லண்டன்: உலகிலேயே மிகப் பெரிய பணக்கார பாப் பாடகர் என்ற பெருமையை 52 வயதான போனோ பெற்றுள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பால் மெக்கார்டினியை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
போனோவுக்கு கிடைத்த 1 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பேஸ்புக் பங்குகள் மூலம் இந்த பெருமையை அவர் எட்டியுள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தில் போனோ முதலீடு செய்திருந்தது அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதுவரை சர் பால் மெக்கார்டினிதான் ஆண் பாப் பாடகர்களில் மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்து வந்தார். அதை தற்போது போனோ தாண்டி விட்டார்.

மெக்கார்டினியை பி்ன்னுக்குத் தள்ளி
பால் மெக்கார்டினியின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதை விட அதிகமாகவே தற்போது போனோவுக்கு சொத்து உள்ளது.

பியூட்டிபுல் டே
பியூட்டிபுல் டே மூலம் ஹிட்டடித்தவர் போனோ. பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளை 2009ம் ஆண்டு 2.3 சதவீத பங்குகளை இவர் வாங்கினார். இதன் மதிப்பு அப்போது 56 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இன்று அதிக குட்டி போட்டு பெருகி விட்டது.

6 வருடத்தில் உயர்வு
இப்போது இந்த பங்குகளின் மதிப்பு 940 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. தனது இசை வாழ்க்கையில் இதுவரை சம்பாதித்ததை விட இவர் கடந்த 6 ஆண்டுகளில்தான் மிகப் பெரிய அளவில் சம்பாதித்துள்ளார்.

40 வருடமாக பாட்டுதான்
கடந்த 40 வருடமாக இவர் பாடி வருவது குறிப்பிடத்தக்கது. யு2 என்ற குழுவை கடந்த 1976ம் ஆண்டு டப்ளின் நகரில் இவர் உருவாக்கினார். உலகின் மிகப் பெரிய புகழ் பெற்ற ராக் குழுக்களில் இதுவும் ஒன்றாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications