3 பாட்டில் ஒயினை மடக்மடக்கென குடித்து “ஹேங் ஓவர்” நிலைக்குச் சென்ற பூனைக் குட்டி!

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனியின் வுர்செலின் நகரைச் சேர்ந்த பூனையொன்று வழிதவறி பக்கத்து வீட்டுக்காரரின் நிலவறைக்குள் ஏழு வாரங்கள் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வெளியே சென்ற பூனை வீடு திரும்பாததால் வருத்தமடைந்த அதன் உரிமையாளர் அதைத் தேடத் தொடங்கினார்.

Boozing Cat Suffers Serious Hangover After 7 Weeks In Wine Cellar

அலைந்து திரிந்து தேடியும் அவருடைய அன்புக்குரிய பூனை அல்ஜோஷா கண்ணுக்கு தென்படாததால் அதன் புகைப்படத்தோடு நூற்றைம்பது போஸ்டர்களை அச்சிட்டு வீட்டின் அருகிலுள்ள பகுதிகளில் ஒட்டிவைத்தார்.

மூன்று ஒயின் பாட்டில்கள்:

இந்நிலையில் உண்ண உணவின்றி நிலவறைக்குள் மாட்டிக்கொண்டு தவித்த அல்ஜோஷா அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று ஒயின் பாட்டில்களைக் குடித்து காலி செய்துள்ளது.

ஸ்வாகா செய்த பூனை:

சுமார் மூவாயிரம் மதிப்புள்ள ஒயின்களைக் குடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சில தினங்களுக்கு முன் அல்ஜோஷாவைக் கண்டெடுத்தார் அதன் உரிமையாளர் கிளவுடியா.

அதிகமாக குடித்ததால்தான்:

உடனடியாக அல்ஜோஷாவை பிராணிகள் மருத்துவரிடம் கொண்டு சென்றதில் அவர் ஒயினை அதிகமாகப் பருகியதால் பூனை இப்படி பாதிப்புக்குள்ளானதாக தெரிவித்தார்.

ஸ்ப்பா தலையெல்லாம் சுத்துதே:

மூன்று நாட்கள் படுக்கையிலேயே ஹேங் ஓவர் அதிகமாகி தவித்த அல்ஜோஷா அதன்பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் கலகலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+