போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் தேர்வு எப்படி நடைபெறும்?
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி பரவலாக தேடுபொருளாகியுள்ளது. அதே போல, அடுத்த பிரதமரை கன்சர்வேட்டி கட்சி என்ன முறையில் தேர்வு செய்யும் என்பது குறித்தும் பலரும் தேடி வருகின்றனர். இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகள் இதோ.
இதற்கு முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு பிரதமர் பதவி விலகினால் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர், பதவியில் இருப்பார்.
தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடலாம்.
போட்டியிடப்போவது யார் யார் என்று உறுதியான பிறகு, இரண்டுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்தால், இரண்டு பேராகும் வரை பல சுற்றுகள் தொடர் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்.
முதல் சுற்றில் போட்டியாளர்கள் 5% வாக்குகளைப் பெற வேண்டும். அப்படி பெற முடியாதவர்கள் வெளியேற வேண்டும்.
இரண்டாம் சுற்றில் 36 பேரின் வாக்குகளைப் பெற வேண்டும்
இப்படியாக தொடர்ந்து வரும் சுற்றில் கடைசியாக இரண்டு போட்டியாளர்கள் மட்டும் மீதமிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து கன்சர்வேட்டி கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து தலைவரை தேர்வு செய்வர்.
அடுத்த பிரதமர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
கட்சியின் தேர்தலில் வெல்லும் போட்டியாளர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ஆவார். அவரிடம் பிரிட்டிஷ் அரசி ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார்.
பொதுத்தேர்தல் நடக்குமா?
வாய்ப்பில்லை.
பொதுவாக, பிரதமர் பதவி விலகினால், பொதுத்தேர்தல் நடத்தப்படாது.
ஜனவரி 2025இல் தான் அடுத்த தேர்தல் நடைபெறும். ஒருவேளை புதிய பிரதமர் விரும்பினால், பொதுத்தேர்தல் நடைபெறலாம்.
அடுத்த பிரதமர் யார்?
தற்போதைய நிலவரப்படி, உறுதிப்படுத்தப்பட்ட ஆட்கள் யாரும் இல்லை. ஆனால், சில அரசியல் தலைகளின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன.
சஜித் ஜாவித் மற்றும் ஜெர்மி ஹண்ட் ஆகியோர் ஏற்கனவே நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்கள் இந்த முறையும் போட்டியிட வாய்ப்புண்டு.
- போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?
- போரிஸ் ஜான்சன்: பிரிட்டன் பிரதமரை பதவி விலக வைத்த 5 காரணிகள்
அதேபோல, வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டண்ட், முன்னாள் கருவூலர் ரிஷி சுனக், வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ், வெளியுறவு விவரங்கள் குழு தலைவர் டாம் டுகெந்தாட், பாதுகாப்பு செயலர் பென் வாலேஸ், கருவூலர் நாதிம் ஸகாவி', அட்டர்னி ஜெனரல் ஸ்வெல்லா ப்ரேவர்மேன் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
போரிஸ் ஜான்சனுக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன?
அதிகாரபூர்வமாக பிரதமர் பதவியை விட்டு விலகும் வரை போரிஸ் ஜான்சனுக்கு தற்போதிருக்கும் எல்லா அதிகாரங்களும் அப்படியேதான் இருக்கும். இது ஏட்டளவில் மட்டுமே. ஆனால் உண்மையில், புதிய கொள்கைகளைக் கொண்டு வருவது போன்ற அதிகாரங்களை அவர் பயன்படுத்த முடியாது.
https://www.youtube.com/watch?v=IgGGegAKmZM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications