பெண்களின் அங்க அளவை வைத்து டிஸ்கவுண்ட் கொடுக்கும் சீன ரெஸ்டாரண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீஜிங்: பெண்களின் பிரா அளவை வைத்து டிஸ்கவுண்ட் அறிவித்த சீன ஹோட்டல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சீன நாட்டிலுள்ள ஜியான்ஜியாங் ஈவ்னிங் போஸ்ட் ஊடகத்தில் இதுகுறித்தசெய்தி புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. நகரில் ஆங்காங்கு, இந்த டிஸ்கவுண்ட் குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் புகார் வந்ததாம், அதுகுறித்து புகார்கள் குவிந்ததால் விசாரணை நடந்துள்ளது.

ஜிஜியாங் மாகாணத்திலுள்ள டிரெண்டி ஸ்ரிம்ப் ரெஸ்டாரண்டில் இதுபோன்ற டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

பெண்கள் வரிசையில் நிற்பதை போன்ற கார்ட்டூன்களை வரைந்து அதில் "மொத்த நகரமும் மார்பகங்களை எதிர்பார்க்கிறது" என்று உள்ளாடையில் எழுதப்பட்ட காட்சி கள் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளன.

அதிக டிஸ்கவுண்ட்

அதிக டிஸ்கவுண்ட்

பிரா கப் சைஸ்சை பொறுத்து அவர்களுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணுக்கு அதிகபட்சம் 65 சதவீதம் வரை டிஸ்கவுண்ட். சிறு மார்பகங்கள் கொண்ட பெண்ணுக்கு 5 சதவீதம் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

இதுகுறித்து ரெஸ்டாரண்ட் பொது மேலாளர் லான் ஷென்கங் கூறுகையில், இந்த டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்ட பிறகு 20 சதவீத வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தெரிவித்து, தங்கள் டிஸ்கவுண்ட் விளம்பர யுக்தியை நியாயப்படுத்தியுள்ளார்.

Chinese Man Creates Record By Drinking 50 Eggs in 20 Secs - Oneindia Tamil
பரிசோதிக்க பெண்கள்

பரிசோதிக்க பெண்கள்

சில பெண் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்தை பார்த்து பெருமையுடன் ரெஸ்டாரண்ட் வந்ததாகவும், அவர்கள் மறைப்பதற்கு எதுவுமில்லை என கூறி, அதிக டிஸ்கவுண்ட் பெற்று மகிழ்ந்ததாகவும், லான், மேலும் தெரிவித்துள்ளார். மார்பக அளவை பரிசோதிக்க பெண் ஊழியர்களையே பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Chinese restaurant has come under fire for offering discounts to women depending on their bra size, it's reported.
Please Wait while comments are loading...