மறைந்தார் இவோ.. மாபெரும் பிளாஸ்டிக் சர்ஜரி மேதை.. ஒலிம்பிக் ஜோதியைப் பெற்ற திருப்தியோடு மரணம்!
ரியோ டி ஜெனீரோ: இவோ பிதன்கய். பிரேசில் நாட்டின் மிகப் பெரிய பிளாஸ்டிக் சர்ஜரி மேதை. உலக அளவிலும் புகழ் பெற்றவர். இன்று இவர் உயிருடன் இல்லை. தனது 90வது வயதில் இன்று அவர் மரணமடைந்தார்.
இவரது வாழ்க்கையைப் போலவே இவரது மரணமும் உலக மக்களால் பேசப்படும் ஒன்றாக மாறிப் போய் விட்டது. ரியோவில் தொடங்கியுள்ள ஒலிம்பிக் போட்டியையொட்டி நடந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின்போது கடைசியாக இவரிடம்தான் ஒலிம்பிக் ஜோதி ஒப்படைக்கப்பட்டது. அந்த சந்தோஷத்துடனேயே மரணத்தைத் தழுவியுள்ளார் இவோ.

மாரடைப்பால் இவோ மரணமடைந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு மரணமடைந்தார் இவோ. வெள்ளிக்கிழமைதான் இவர் ஒலிம்பிக் ஜோதியைப் பெற்றார்.
இவோ, பிரேசில் மக்கள் மனதில் இடம் பிடிக்கக் காரணம் 1961ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய சர்க்கஸ் கூடார தீவிபத்துதான். நூற்றுக்கணக்கானோர் இந்த தீவிபத்தில் சிக்கி உடல் உறுப்புகள் சேதமடைந்தனர். அவர்களுக்கு இலவசமாகவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரிப்படுத்தியவர் இவோ.
மக்களுக்காக செயல்பட்ட டாக்டர் என்றால் அது சாதாரண வார்த்தைதாதன். மாறாக மக்களின் சிறப்பான வாழ்க்கைக்காக பாடுபட்டவர் டாக்டர் இவோ என்று பிரேசில் நாட்டு தற்காலிக அதிபர் மிக்கல் டெமேர் புகழாரம் சூட்டியுள்ளார்.
உயிர் எந்தளவுக்கு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தியவர் டாக்டர் இவோ. மேலும் உடல் உறுப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு அதை சரி செய்ய இவர் காட்டிய வேகம், அக்கறை மிகப் பெரிய விஷயமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications