ஆழமான ஏரிக்குள் விழுந்த நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பிரேசில் அதிபரின் மனைவி
பிரேசில் நாட்டின் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவியும் அந்த நாட்டின் முதல் குடிமகளுமாகிய மார்சிலா தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து தண்ணீரில் குதித்துள்ளார்.
Recommended Video

ஸ்பெயின்: பிரேசில் நாட்டின் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவியும் அந்த நாட்டின் முதல் குடிமகளுமாகிய மார்சிலா தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து தண்ணீரில் குதித்துள்ளார்.
அரைகுறை நீச்சல் பயிற்சியுடன் அவர் வேகமாக தண்ணீரில் குதித்து அந்த நாயை காப்பாற்றி இருக்கிறார். இந்த விஷயம் பிரேசில் முழுக்க வைரல் ஆகியுள்ளது.
ஒரு அதிபரின் மனைவி இப்படி நாய் ஒன்றிற்காக உயிரை பணயம் வைத்ததை மக்கள் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் விளம்பரம் என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளார்.

நாய் குட்டி
அவர் தனது மகனுடன் அதிபர் பங்களாவில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர்களின் வளர்ப்பு நாய் பிக்கோலி, தோர் இரண்டும் அவர்களுடன் விளையாடி இருக்கிறது. அதில் பிக்கோலி நாய் அருகில் இருந்த ஏரிக்குள் குதித்து விளையாடி உள்ளது. அப்படி விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நீந்த முடியாமல் தத்தளிக்க தொடங்கியுள்ளது.

நீருக்குள் குதித்தார்
இதனைப் பார்த்தவுடன் மார்சிலா கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை. அப்படியே ஆழமான ஏரிக்குள் குதித்து நாயை நோக்கி வேகமாக சென்றார். அவருக்கு கொஞ்சம்தான் நீச்சல் தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் கஷ்டப்பட்டு நாயை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளார். முக்கியமாக அந்த நாயை காப்பாற்றாத பாதுகாவலரை, மார்சிலா இடைநீக்கம் செய்து இருக்கிறார்.

கண்டிப்பு தெரிவித்தனர்
இதில் மார்சிலா அவரது பணியாளர்களுக்கு முக்கியமாக கட்டளை ஒன்றும் இட்டுள்ளார். அந்த சம்பவத்தை பார்த்த யாருமே இதை வெளியே சொல்ல கூடாது என்றுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் இறுதியில் நடந்து இருந்தாலும் இவ்வளவு நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது பிரேசில் செய்தி நிறுவனங்களுக்கு செய்தி கசிந்துள்ளது

கலவையான விமர்சனம்
இதை பல பேர் பாராட்டி இருக்கிறார்கள். இவ்வளவு ஏரிக்குள் குதித்து நாய் ஒன்றை காப்பாற்றிய தைரியத்தை பாராட்டி உள்ளனர். அதே சமயம் இதில் சிலர் கிண்டலும் செய்து இருக்கிறார்கள். வேண்டுமென்றே மார்சிலா இப்படி செய்து இருக்கிறார் என்றுள்ளார். விஷயம் வெளியே தெரிய கூடாது என்று கூறிவிட்டு அதை வெளியிட்டு விளம்பரம் தேடியுள்ளார் என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications