பிரேசிலில் படுமோசமடையும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,185 பேர் பலி- 31,197 பேருக்கு பாதிப்பு
ஜெனிவா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா பாதிப்பு மிக மோசமடைந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,185 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 31,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,11,660.
கொரோனாவால் உலக நாடுகளில் மொத்தம் 4,12,997 பேர் மரணித்துள்ளனர். மேலும் 35,96,095 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தும் உள்ளனர்.

அதிகரித்த மரணங்கள்
உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் மிக மோசமான பாதிப்பு இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,45,549 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 19,056 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,093 பேர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,14,148 ஆக அதிகரித்திருக்கிறது.

பிரேசிலில் மிக மோசம்
அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா மிக அதிகமாக பாதித்து வரும் நாடாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 31,197 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒருநாள் பாதிப்பில் பிரேசில்தான் முதலிடத்தில் இருக்கிறது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,42,084 ஆகும். ஒருநாள் கொரோனா மரணங்களிலும் பிரேசிலே முதலிடத்தில் இருக்கிறது. இங்கு நேற்று மட்டும் 1,185 பேர் மாண்டு போயினர். பிரேசிலில் மொத்த கொரோனா மரணங்கள் 38,497 ஆகும்.

இந்தியா 3-வது இடம்
ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 10,218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் நேற்று ஒருநாளில் 277 ஆக இருந்தது. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் 7,750 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் மாநிலங்கள்தான் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் பாதிப்பு
ரஷ்யாவில் நேற்று ஒருநாளில் கொரோனா பாதிப்பு என்பது 8,595ஆக இருந்தது. ரஷ்யவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,85,253 ஆக உள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 171 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 6,142 ஆக இருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 40,883 ஆகவும் இத்தாலியில் 34,043 ஆகவும் இருந்து வருகின்றன. ஸ்பெயினில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 27,136 ஆக அதிகரித்திருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications